பன்முக கலைஞர்கள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக கலைஞர்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 .


 திருச்சி மாவட்டம் திருவரம்பூர் எறும்பீஸ்வரர் நகரில் நிறுவன தலைவர் நடிகர் வேல்முருகன் தலைமையில் பன்முக கலைஞர்கள் அறக்கட்டளை சார்பாக நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 





விழாவினை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் அலி அகமத், செயலாளர் பழனி முருகன், பொருளாளர் நடிகர் பாலமுருகன், இணைச் செயலாளர் பாரதி, துணை ஒருங்கிணைப்பாளர் சுபேருதீன், அமைப்பாளர் ரமேஷ், துணை ஆலோசகர் துணை அமைப்பாளர் தாமரைச்செல்வன், மக்கள் தொடர்பாளர் ஹரிஹரன், சட்ட ஆலோசகர் அகிலன், துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ஐயப்பன், மாவட்ட துணை தலைவர் அன்வருதீன், துணைச் செயலாளர் சித்தி சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 




விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ். பி. பாபு, போலீஸ் பார்வை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர். என். பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஏரோ ஸ்கே டோபால் அசோசியேஷன் தலைவர் நா. ராகேஷ் சுப்ரமணியன் செயலாளர் பிரவீன் ஜான்சன். மற்றும் ஒரு அறக்கட்டளை ஏ கே டி பாண்டியன், பாஜக பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் வெங்கடேசன், பாஜக திருச்சி மாவட்ட மண்டல பொதுச்செயலாளர் சேகர், ஜே கே சி அறக்கட்டளை தலைவர் ஜான் ராஜ்குமார், தமிழ் குரல் பவுண்டேஷன் தலைவர் புருஷோத்தமன், நாடக நடிகர்கள் சங்கம் டேவிட் ஆரோக்கியராஜ், இந்து சேனா மாநில செய்தி தொடர்பாளர் வீரேந்திர குமார் ,ஆர் எஸ் ஸ்ரீதர் வரதலாயா கலைக்குழு இயக்குனர் சத்யன் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

 இந்த விழாவில் திருச்சி மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் கலந்துகொண்டு பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் இணைய வலைத்தளங்களில் மூலம் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள் மேலும் போலீஸ் பார்வை இதழ் ஆசிரியர் டாக்டர். என். பாலகிருஷ்ணன் அவர்கள் அழிந்து வருகின்ற நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் நாடகங்கள் மக்களுக்கு காலத்திற்கு ஏற்ற போல் பல கருத்துக்களை எடுத்துரைக்க கூடிய நாடகங்களை தயாரித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மீண்டும் நாடகங்கள் தமிழகமெங்கும் நடத்த கலைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த பன்முக கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கு இங்கு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்வேறு துறைகளில் பொதுநல சேவைகள் செய்து கொண்டிருக்கின்ற பெரியவர்கள் சான்றோர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள் அழிந்து வருகின்ற நாடகக் கலையை மீண்டும் மீட்டெடுத்து மக்கள் மத்தியில் நல்ல நல்ல பாராட்டினை பெறுகின்ற வண்ணம் கருத்துள்ள நாடகங்களை தயாரித்து வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குழந்தைகள் பெண்கள் கடத்தல் பிரிவு சம்பந்தமாக குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து வெளியிட மாநகர காவல் துறை ஆவன செய்ய வேண்டும்என்றும் அந்த விழிப்புணர்வு குறும்படத்தினை போலீஸ் பார்வை குடும்பம் சார்பாக தயாரித்து வழங்க இந்த பன்முக கலைஞர்கள் நல்வாழ்வு சங்கத்தில் உள்ள கலைஞர்கள் மூலம் இந்த குறும்படத்தினை இயக்க சங்கத்தின் தலைவர் வேல்முருகன் அவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 இந்த விழாவினை சிறப்பாக நடத்த போலீஸ் பார்வை குழுமத்தின் தலைமை நிருபர் ஏரோஸ்கேட்டோ பால் அசோசியேஷன் தலைவர் நா. ராகேஷ் சுப்பிரமணியன் அவர்கள் உறுதுணையாக இருந்து இந்த விழாவில் ராகேஷ் சுப்ரமணியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கொண்டாட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்.B.ஶ்ரீநிவாசன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.