பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.


திருச்சியில் இயல் இசை நாடக கலைகளில் நலிந்த கலைஞர்களின் நலன் கருதி துவங்கப்பட்டுள்ள, 

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா, நிர்வாக குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஏற்பாட்டில், பொருளாளர் பாலமுருகன், செயலாளர் பழனி முருகன், இணைச்செயலாளர் பாரதி, துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்  டாக்டர் பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு ஏரோஸ்கட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கன் A மாற்றம் என்ற விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டனர்.

அப்போது கீரைதீன் தயாரிப்பில், இயக்குனர் வேல்முருகன் இயக்கத்தில், திருச்சி என்டர்டைன்மென்ட் குரூப்ஸ் சினிமா வழங்கும்  வடக்கன் A ஏமாற்றம் விழிப்புணர்வு குறும்படத்தை பற்றி சிறப்பு விருந்தினர்கள் கூறுகையில், இந்தக் குறும்படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம், அதாவது மொழியினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது, அத்துடன் நம்முடன் என்னதான் உயிர் நண்பராக பழகினாலும், ஒரு சிலர் பணத்திற்காக  எப்போது வேண்டுமானாலும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற எதார்த்தமான உண்மையை வெளிகாட்டி உள்ளது.

குறும்படத்தின் இறுதியில் தெரிவிக்கும் கருத்து - மொழி தேவை இல்லை என்றாலும் உங்கள் தேவைக்காவது கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி முடித்திருப்பது சிறப்பாக உள்ளது, வடக்கன் A மாற்றம் குறும்படத்தை அனைவரும் பார்க்கும் விதமாகவும் நல்ல கருத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலோசகர் கார்த்திகேயன், ஹரிஹரன், வீரா, தாமரைச்செல்வன் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Reporter.Arumugam.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.