Posts

Showing posts from June, 2022

தஞ்சைமாவட்டத்தில் அரசு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்புசெய்து சாஸ்த்ராபல்கலைகழகம் கட்டிடம் அரசுநிலத்தைமீட்டு வீடில்லாஏழைவிவசாயிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்கோரிஇந்தியவிவசாயசங்கம் போராட்டம்

Image
.  தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரி தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூரை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க சிறைத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியிருந்த 31.37 ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கடந்த 35 ஆண்டுகளாக இப்பல்கலைகழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டடங்கள் கட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், இதற்காக வித்தியாசத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்

தூத்துக்குடி மாவட்டம்காவல்துறைசார்பாக மாற்றத்தைதேடிநிகழ்ச்சிமூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தியகாவல்துறையினர்.

Image
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி  (28.06.2022) தூத்துக்குடி தென்பாகம், எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.  ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதி

தென்காசிமாவட்டத்தில் பழமையான ஐம்பொன்சிலை மற்றும் இருசக்கரவாகனங்கள் திருடிய திருடர்கள்கைது காவல்குழுவினர்அதிரடி.SP.பாராட்டு

Image
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஆலங்குஔளம், கடையம் பாவூர்சத்திரம், மற்றும் ஊத்துமலை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு, 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2- ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு ஆகியோர்களின் உத்தரவுபடி பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ், ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சந்திரசேகரன், கடையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சரவணன், ஆலங்குளம் தலைமை காவலர் திரு. பாலமுருகன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சேஷகிரி, குற்றப்பிரிவு தலைமைக் காவலர்கள் திரு. மோகன்ராஜ், திரு. குமரேச சீனிவாசன், முதல் நிலைக் காவலர்கள் திரு. திருமலைக்குமார், திரு. சௌந்தரபாண்டியன், காவலர்கள் திரு. மகேஷ், திரு. லிங்கராஜா, தென்காசி சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் திரு. ராஜமனோஜ் மற்றும் திரு. ஜேசு ஆகியோரின் தீவிர விசாரணையிலும் மற்றும் தென்காசி மாவட்டம் ம

தூத்துக்குடி மாவட்டம் . மாநிலத்திலேயே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவியான ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் செல்வக்குமார் மகள் துர்காவிற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்DGP.Dr.C.SAILENDRABABU.IPS அவர்கள் பாராட்டு.

Image
 தூத்துக்குடி மாவட்டம் . மாநிலத்திலேயே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற  ஒரே மாணவியான ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் செல்வக்குமார் மகள் துர்காவிற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்DGP.Dr.C.SAILENDRABAVU.IPS அவர்கள் பாராட்டு. தெரிவித்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு. L. பாலாஜி சரவணன் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டு. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற (2021-2022) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான துர்கா என்பவர் ஒருவர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவியின் தந்தை செல்வக்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது. மேற்படி தலைமை காவலரான செல்வக்குமார் என்பவர் காவல்துறையில் 1997ம் வருடம் பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த 2 வருடங்களாக ஆறுமுகநேரி காவல்

திருச்சிமாவட்டம் தென் சீரடி சாய்பாபா கோவில் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து கையும் களவுமாக பிடித்த ஊர் பொதுமக்கள்- இளைஞரை மீட்க சென்ற காவல் துறை வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.

Image
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி என்ற பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது, இதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில்,  சுற்றுவட்டார பகுதி மக்கள் புகார் அளித்த னர். 26-06-22 இரவு இரண்டு இளைஞர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் வழி பறியில் ஈடுபடுவதற்க்காக, சாய்பாபா கோவில் அருகே உள்ள வாரியில் மறைந்து நின்று கொண்டிருந்த  இளைஞர்களை,  அப்பகுதி கிராம பொதுமக்கள் கையும் களவுமாக பிடிக்க முயன்ற போது, ஒருவர் மட்டும் தப்பிய நிலையில், திருவானைக்காவல் வடக்கு 5ம் பிரகாரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் வயது 24 என்ற இளைஞர் மட்டும் மாட்டிக் கொண்ட நிலையில், தர்ம அடி கொடுத்து அக்கரைப்பட்டி ஊர் பகுதியில் உள்ள கோவில் சாவடியில் அடைத்து வைத்துள்ளனர்.  அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவத்தை சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே அக்கரைப்பட்டியை சுற்றியுள்ள, தேவி மங்கலம், ஆயக்குடி, வங்காரம், கருங்காடு, அய்யம்பாளையம், நாடார்பாளையம், எஸ்.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.போதைப்பொருட்களை தவிர்ப்போம்!தடுப்போம்!! இளம் தலைமுறையினரை காப்போம்!!!

Image
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 26.06.2022  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  ஜெயங்கொண்டம் நகரத்தில் காவல்துறை சார்பில் ஜெயங்கொண்ட உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைகதிரவன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியில் குமார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி ஜெயங்கொண்டம் யூனியன் ஆபீஸ் அருகே தொடங்கி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், குற்றங்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவு முதலியவற்றை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. REPORTER..ம.மஹேஷ்.அரியலூர்

கோவைமாவட்டத்தில் பல்வேறுகாவல்நிலைபகுதிகளில் களவுபோனரசுமார்16லட்சம்மதிப்பிலான செல்போன்கள் தனிப்படைகாவல்குழுவினரால் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த SP.பத்ரிநாராயணன் IPS.

Image
 கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் களவு போன செல்போன்கள் சம்மந்தமாக கோவை மாவட்ட காவல் நிலையங்கள் மூலம்  புகார்கள் பெறப்பட்டு மேலும் புகார்களை விரைந்து கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தொடர்ந்து செல்போன்களின் IMEI நம்பரை TRACE செய்ததன் மூலமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15,75,000/-மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடித்த செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (24.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு செல்போன் தொலைத்த நபர்களை வரவழைத்து அவர்களிடம் செல்போன்களை நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று கடந்த மாதமும் 19,50,000/- மதிப்பிலான 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதுகுறிப்பிடதக்கது . நிருபர்.P.நடராஜ்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற்தடுப்புஆய்வுகூட்டம் மேமாதம் சிறப்பாக பணியாற்றியகாவல்துறையினருக்கு SP.Dr.தீபாசத்யன் IPS பாராட்டு

Image
இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற்தடுப்புஆய்வுகூட்டம் மேமாதம் சிறப்பாக பணியாற்றியகாவல்துறையினருக்கு SP.Dr.தீபாசத்யன் IPS  சான்றிதழ்,கேடயம் வழங்கிபாராட்டு. இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (22/06/2022)  நடைபெற்றது  குற்றதடுப்பு ஆய்வு கூட்டத்தில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திருமதி. மங்கையர்கரசி கலவை  காவல் நிலையம், திரு. மணிமாறன் காவேரிபாக்கம் காவல் நிலையம், திரு.சேதுபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மதிவாணன் பானாவரம் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு. சங்கர் ஆற்காடு நகர காவல் நிலையம், திருமதி. கெஜலக்ஷ்மி இராணிப்பேட்டை காவல் நிலையம், திருமதி. ஜான்சிராணி அரக்கோணம் நகர காவல் நிலையம்,  திருமதி. மீனா இராணிப்பேட்டை காவல் நிலையம்,  முதல் நிலை காவலர்கள் திரு.கபிலன் சிப்காட் காவல் நிலையம், திரு. கமலகண்ணன் நெமிலி காவல்நிலையம்,  திரு. காதர் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. குமரன் இராணிப்பேட்டை காவல் நிலையம், இரண்டாம் நிலை காவலர் திரு.நாராயணன் காவேரிபாக்கம் காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி  அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாட்ட காவல்

திருநெல்வேலி ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

Image
திருநெல்வேலி  மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார்நகரை சேர்ந்த செல்லத்துரை என்பவர் இணையதளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.3 இலட்சம் பணத்தை இணையதளம் மூலமாக செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக செல்லத்துரை என்பவருடைய ரூபாய் 2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம்  22.06.2022  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை  உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை

கோவை மாவட்டம் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தலைமைக் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் IPS

Image
தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி கடந்த 16.06.2022 முதல் 19.06.2022 தேதி வரை குஜராத்தில் வதோதரா என்னுமிடத்தில் நடைபெற்றது.இதில் Master தடகள போட்டியில்  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1710 திரு. கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள்  (22.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு  நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் காவல் துறையினரிடையே தங்களது திறமைகளை ஊக்குவிக்கும்  விதமாக அமைந்துள்ளது. நிருபர்.P.நடராஜ்

திருவண்ணாமலைமாவட்டம் திருமணம்,போன்றவிழாக்களில் மீதமாகும் உணவைவீணாக்காமல் பகிர்ந்தளிக்கநேரில்வந்துபெற்றுசெல்லும்வசதியை மாவட்ட ஆட்சியர்பா.முருகேஷ்IAS தொடங்கிவைத்தார்

Image
 திருவண்ணாமலைமாவட்டம் திருமணம்,போன்றவிழாக்களில் மீதமாகும் உணவைவீணாக்காமல் பகிர்ந்தளிக்கநேரில்வந்துபெற்றுசெல்லும்வசதியை மாவட்ட ஆட்சியர்பா.முருகேஷ்IAS தொடங்கிவைத்தார்.அதன்படி, அதிகபட்சம் 50 நபர்களுக்கு மேல் பயன்பெறும் வகையில், சாப்பிடும் தரத்தில் உள்ள உணவை பெற்று சென்று, தேவைப்படும் நபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படடும் பசிக்கு உணவின்றிதவப்பவர்களுக்கு பசியைபோக்கும் இந்த புதிய முயற்சியை  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் IAS தொடங்கி வைத்தார். மேலும், அதிகபட்சம் 50 நபருக்கு மேல் பயன்படுத்தும் வகையில் உணவு இருந்தால், 9087711112 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உடனடியாக, சம்பந்தப்பட்ட துறையின் ஊழியர்கள் நேரில் வந்து, உணவை பெற்று செல்வார்கள் என அவர் தெரிவித்தார். மேலும், அதற்கான பிரத்யேக வாகனத்தையும் கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வீடு தேடி வந்து தரத்தை பரிசோதிக்க அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, நடமாடும் உணவு பகுப்பாய்வு வாக

திருநெல்வேலி சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

Image
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. ராஜ், உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம் ஆகியோர் சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களுக்குச் சென்று  பொதுமக்களுக்கும், பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கும்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும்,சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  அப்போது மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் பேசுகையில், சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றும், எப்படி ஏமாறாமல் இருப்பது என்றும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது  மாணவிகளுக்கு  செல்போனில் ஆன்லைன் Game  விளையாடும் போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விளையாடும் போது வரும் தேவை இல்லாத link யை click செய்ய வேண்டாம் என்றும், link யின் மூலம் 

சென்னை ATM.இயந்திரத்தை உடைத்து பணத்தைகோள்ளையடிக்கமுயன்ற வாலிபன்கைது வேப்பேரி காவல்உதவிஆணையர் G.ஹரிகுமார் காவல்குழுவினர்அதிரடி.காவல்ஆணையர் சங்கர்ஜிவால்IPS.பாராட்டு

Image
  .சென்னை பெருநகர பெரியமேடு G 2. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாரத ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் திட்டமிடுவதாக ஏடிஎம் இயந்திரம் சிசிடிவி கேமரா பதிவின் படி தகவல் தெரிந்து பாரத ஸ்டேட் வங்கி ரீஜினல் பிரிவிலிருந்து சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக தகவலறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காIPSஅவர்கள், சௌத் &ஈஸ்ட் ,இணை ஆணையர் பிரபாகர்IPS அவர்கள் கில்பாக் துணை ஆணையர் கோபி அவர்கள் ஆகியவர்களின் வழிகாட்டுதல்படி வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் தலைமையில் G 2. காவல் ஆய்வாளர் பர கத்துல்லா மற்றும் காவல் குழுவினர் களமிறங்கி சிசிடிவி புட்டேஜ் மற்றும் வாலிபரின் புகைப்படம் வைத்து சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வாலிபரை கண்டறிந்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட தில் அந்த வாலிபன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட திட்டமிட்டதை ஒப்புக்கொண்டான்,  உடனடியாக வேப்பேரி காவல் சரக உதவி ஆணையர் G.ஹரி

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அய்யர்சாமி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் (இ.கா.ப) அவர்களுக்கு அலங்கார அணிவகுப்பு வழங்கப்பட்டது.

Image
 கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அய்யர்சாமி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் (இ.கா.ப) அவர்களுக்கு அலங்கார அணிவகுப்பு வழங்கப்பட்டது.மாவட்டத்தில் இயங்கி வரும் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி உணவகத்தை பார்வையிட்டு உணவு பட்டியலில் காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க பரிந்துரைத்தார். மேலும் மாவட்டத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவுகளை ஆய்வு செய்தார். மற்றும் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் குழந்தை காப்பகத்தையும், ஆயுதப் படையில் உள்ள காவலர் குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார்.காவலர்கள் குறைகளையும் கேட்டறிந்தார். ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு,  பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்ப்படுத்தும் விதமாக பணிபுரியுமாறு அறிவுரை வழங்கினார். நிருபர்.ஜெயபிரகாஷ்

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.SP.டோங்கரேபிரவின்உமேஷ் IPS பாராட்டு.

Image
தேனி மாவட்டம், தென்கரை  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக  பேச்சியம்மாள் என்பவர் தன்னுடைய மகன் அழகுராஜா என்பவரை கொலை செய்துவிட்டதை  தொடர்ந்து  தென்கரை காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில்  இவ்வழக்கு 20.06.2022-ம் தேதியன்று தேனி மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் முடிவில் நீதிபதி திரு.K.சிங்கராஜ்,B.Com,LLB, அவர்கள் தென்கரை காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் பேச்சியம்மாள் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து சட்டப்பிரிவு 302 IPC-ன் படி  ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/- அபராதமும் , அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6  மாத சிறை தண்டனையும்  கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.  இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.சிவக்குமார்,B.A,B.L., அவர்களுக்கும், சிறப்பாக  புலன் விசாரணை செய்த முன்னாள் தென்கரை  காவல் நிலைய காவல் ஆய்வாளர் தி

காஞ்சிபுரம்மாவட்டம் காரைமடக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் ஒரு மணி நேரத்தில் கைதுதாலுகா காவல்துறையினர்அதிரடி DIG.பாராட்டு.

Image
காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிரகாஷ் ( 31 ), த /பெ.ராஜேந்திரன், அன்னை பழைய இரும்பு கடை, தர்காமேடு, சந்தவேலூர் என்பவர் 13.06.2022 அன்று 15.40 மணிக்கு தனது டாடா இண்டிகா காரில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராஜகுளம் வேளாண் கூட்டுறவு அருகே தனது காரை TN 21 BD 9598 Splender Plus வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வழிமடக்கி, கருங்கற்களால் தனது கார் கண்ணாடியை உடைத்து , காரில் இருந்த என்னை கீழே இறக்கி அடித்து தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1200 /- எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக புகார் அளித்தார்.  இச்சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காஞ்சி தாலுக்கா காவல் நிலையம் மற்றும் கபார் ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவித்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தினார். இது சம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலைய காவல் ஆளினர்கள்  1 ) திரு.தணிகைவேல், த.கா.640 .  2 ) திரு.விஜய் தனிப்பிரிவு மு.நி.கா.216 மற்றும் கப்பார் ரோந்து

திண்டுக்கல் மாவட்டத்தில் வயதான தம்பதியிடம் நூதன முறையில் ஏமாற்றி ரூ.76,821/- திருடிய நபரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

Image
16.06.2022 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் நேருஜி நகரில் வசித்து வரும் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.76,821/- நூதன முறையில் திருடிய நபரின் அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்களை வைத்து உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்(28) என்பவரை கண்டறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உளுந்தூர்பேட்டையில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும்  பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என்றும், யாரேனும் தங்களுக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால் உடனே 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. நிருபர்.R.குப்புசாமி.

ராணிப்பேட்டைமாவட்டத்தில் முக்கியமான மேம்பாலங்களில் வண்ண விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து மக்களுக்கு அர்பணிக்கும் விழா

Image
.இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், இராணிப்பேட்டை காவல்துறை மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய, இராணிப்பேட்டை வாலாஜா சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வண்ண ஓவியமிட்டு  பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார்கள். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ.கா.ப அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். துணைஆசிரியர்.S.சுந்தர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவுப்படிகாவல்துறைசார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும்கூட்டம் தூத்துக்குடி SP.Dr.Lபாலாஜிசரவணன் அறிவிப்பு

Image
 .தமிழகத்தில் மாவட்டம்தோறும் பொதுமக்கள் அளிக்கும் மனுமீதுவிசாரணைசெய்துகுறைதீர்க்கும் கூட்டம் இரு வாரங்களுக்கு ஒருமுறை  முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் - பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் மனு கூட்டத்தை பயன்படுத்தி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள புகார் அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார்.மேலும் கடந்த 10.05.2022 அன்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 53ன் படி அரசாணை எண் 259 உள்துறை (காவல் 13) இன் கீழ் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேற்படி அறிவிப்பின்படி பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதன்கிழமையில் (முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில்) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்ப

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரை வழங்கிய திருநெல்வேலி சரகDIG

Image
 திருநெல்வேலி காவல் சரக  துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார் IPS அவர்கள், திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்  கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று காவல் நிலையங்களை  ஆய்வு  செய்தார். அப்போது சரக டி.ஐ.ஜி அவர்கள் காவல் மரணத்தைத் தடுக்க தமிழக டி.ஜி.பி அவர்கள்  காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளதை எடுத்து கூறியதுடன், காவல் துறையினர் குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் தனியார் இடங்களில் வைத்தோ, காவல் நிலையத்தில் வைத்தோ விசாரணை நடத்தக் கூடாது என்றும், ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டால், மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

கோவை மாவட்டம் கோவில்பாளையம் கீழேகிடந்தபணத்தை காவல்நிலைத்தில் ஒப்படைத்தவாலிபர். SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு

Image
 .கோவைமாவட்டம்கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ATM இயந்திரத்தில் கடந்த 11.06.2022 ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவர் தவறவிட்ட ரூ.99,000/- பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த சேது என்பவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்கள் அப்பணத்தை தவறவிட்ட நபரைப்பற்றி  விசாரணை செய்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர். மேற்படி இச்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள்  (13.06.2022) பெண் தலைமை காவலர்  மற்றும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த வாலிபர் சேது இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். நிருபர்.P.நடராஜ்

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகளை கைது செய்த இளம் உதவி ஆய்வாளர்களுக்குSP.P.சரவணன்IPS பாராட்டு.

Image
 தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க  ஆபரேஷன் 2.0 வினை செயல்படுத்தியுள்ளார். இதன்படி, கஞ்சா வழக்குகளில்  சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகளை முடக்க  தென்மண்டல ஐ.ஜி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS அவர்கள் அறிவுறுத்தயிருக்கும் நிலையில், அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கஞ்சா சம்பந்தமான ரோந்துபணி செய்து வரும் நிலையில் தாழையூத்து காவல் உதவி ஆய்வாளர்  திரு. இன்னோஸ்குமார், பழவூர் காவல் உதவி ஆய்வாளர்  திரு.பார்த்திபன், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஆண்டோ பிரதீப், ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கஞ்சா விற்பனை செய்த 4 நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணையில் உள்ள வழக்குகளின் எதிரிகள் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரின் 12 வங்கி கணக்குகளும், அவற்றில் இருந்த ரூபாய் 98,343/-  முடக்கம் செய்ய

சென்னை சூளை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போதையில் ரகளை செய்த வாலிபர் கைது வேப்பேரி காவல் சரகம் உதவி ஆணையர் ஹரிகுமார் தலைமையில்காவல் குழுவினர் அதிரடி

Image
சென்னை ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த சுரேஷ் இவர் சூளை அங்காளம்மன் கோவில் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார் ஹோட்டலில் குடிபோதையில் புளியந்தோப்பு கே எம் கார்டன் பத்தாவது தெருவை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.    இந்நிலையில் சுரேஷின் ஹோட்டலுக்கு சென்ற விஜய் கடையில் சாப்பிட்டுவிட்டு மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளான் போதையில் இருந்த அவன் என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறி ரகளை செய்தான் இதனை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளர் சுரேஷை கையால் தாக்கி உள்ளான் இதைதொடர்பாக சுரேஷ் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததின்பேரில்  வேப்பேரி காவல் சரக உதவி ஆணையர் G. ஹரிகுமார் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வேப்பேரி காவல் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர் சுரேஷின் ஓட்டலில் விஜய் ரகளை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது விஜய் ஓட்டல் உரிமையாளர் சுரேஷிடம்  போதையில் பணம் கேட்டு மிரட்டுவது தெளிவாக பதிவாகி இருந்தது இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலைய காவல் குழுவினர் கூறும்போது ஹோட்டல் மற்றும் கட

சேலம் மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் அத்யாவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்ஆணையர் நஜ்முல்ஹோதா IPS விழிப்புணர் ஏற்படுத்தினார்.

Image
 06.06.2022 ம் தேதி காலை சேலம் ஐந்துரோடு மற்றும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா ஆகிய இடங்களில்காவல்துறைசார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு.நஜ்முல் ஹோதா IPS அவர்கள் கலந்துகொண்டு,  சாலையில் அவ்வழியே தலைகவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடையே, தலைகவசம் அணிவதன் அத்யாவசியம், மோட்டார் வாகன சட்டப்படிவிதிமீறல் அதற்கான அபராதம் மற்றும் தலைகவசமின்றி செல்லும்போது ஏற்படும் சாலை விபத்துகளும், இழப்புகளும் பற்றி காணொளிமூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இந்நிகச்சியில் காவல் துணை ஆணையாளர் தெற்கு திரு.N.மோகன்ராஜ் அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம், திரு.K.உதயகுமார் தெற்கு போக்குவரத்து பிரிவு, திரு.N.K.செல்வராஜ் பொறுப்பு கொண்டலாம்பட்டி சரகம், சேலம் மாநகரம் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.T.சரவணன் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்புநிருபர் .ஆசிப்முகம்மது

திருச்சிமாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய குற்றசம்பவங்களில்ஈடுபடுபவர்கள் மீதுகடும்நடவடிக்கை காவல்ஆணையர் கார்த்திகேயன் IPS அதிரடி

Image
 திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 7526 நபர்கள் மீது  சிறப்பு மற்றும் உள்ளுர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 2020-ஆம் ஆண்டு 40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த 2022 ஆண்டு ஐந்தே மாதங்களில் 78 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 64 நபர்கள் மீது  கஞ்சா  வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 419 நபர்கள் மீது வழக்கு பதிவ

தூத்துக்குடி மாவட்டம்கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி அரவை விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. ரேசன் அரிசி மற்றும் குருணை, மாவு பறிமுதல். இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி நடவடிக்கை.

Image
    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி கள் பதுக்கி அரைத்து விற்பனை செய்வதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் இராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் ஜோசப், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதிகளில் உள்ள ரைஸ் மில் களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.  இதில் கழுகுமலை வேத கோயில் தெருவில் இயங்கி வந்த ரைஸ் மில்லில் சோதனை செய்ததில் அதில் ரேசன் அரிசி 240 கிலோ, குருணை அரிசி 40 மூடைகள், மாவாக 35 மூடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மில் உரிமையாளர் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சேவியர் (55), மற்றும் அதே பகுதியை சேர்ந்த அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அலெக்ஸ்இனிகோஜேம்ஸ், (23), கஸ்பார் (18), கழுகுமலை பாலசுப்பிரமணியன் தெருவை   முத்துக்குமார் (41), உள்ளிட்ட நான்கு பேரிடமும் இன்ஸ்பெக்டர் இராணி விசாரணை நடத்தினார். தொடர்ந்து நால்வரையும் கைது செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.  தொடர்ந்து கழுகுமலை பகுதிகளில் உள்ள அனைத்து ரைஸ் மில்களிலும் இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி சோதனை நடத்தினார். ரேசன் அரிசியை