தூத்துக்குடி மாவட்டம் . மாநிலத்திலேயே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவியான ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் செல்வக்குமார் மகள் துர்காவிற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்DGP.Dr.C.SAILENDRABABU.IPS அவர்கள் பாராட்டு.


 தூத்துக்குடி மாவட்டம் . மாநிலத்திலேயே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற  ஒரே மாணவியான ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் செல்வக்குமார் மகள் துர்காவிற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்DGP.Dr.C.SAILENDRABAVU.IPS அவர்கள் பாராட்டு. தெரிவித்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு. L. பாலாஜி சரவணன் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டு.


தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற (2021-2022) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான துர்கா என்பவர் ஒருவர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவியின் தந்தை செல்வக்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது. மேற்படி தலைமை காவலரான செல்வக்குமார் என்பவர் காவல்துறையில் 1997ம் வருடம் பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த 2 வருடங்களாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் மேற்படி மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  மேலும் மேற்படி மாணவி துர்காவையும், அவரது குடும்பத்தாரையும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு. L. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டியதோடு மேற்படிப்புகளிலும் இதே போன்று நன்கு படித்து முதலிடம் பெறவேண்டும் என்று மாணவியை வாழ்த்தி பரிசு வழங்கினார். அவருடன் அவரது தந்தையான தலைமைக காவலர் செல்வக்குமார் மற்றும் அவரது தாயார் ஹேமா சுப்புலெட்சுமி உட்பட அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.

நிருபர்.அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.