திருவண்ணாமலைமாவட்டம் திருமணம்,போன்றவிழாக்களில் மீதமாகும் உணவைவீணாக்காமல் பகிர்ந்தளிக்கநேரில்வந்துபெற்றுசெல்லும்வசதியை மாவட்ட ஆட்சியர்பா.முருகேஷ்IAS தொடங்கிவைத்தார்



 திருவண்ணாமலைமாவட்டம் திருமணம்,போன்றவிழாக்களில் மீதமாகும் உணவைவீணாக்காமல் பகிர்ந்தளிக்கநேரில்வந்துபெற்றுசெல்லும்வசதியை மாவட்ட ஆட்சியர்பா.முருகேஷ்IAS தொடங்கிவைத்தார்.அதன்படி, அதிகபட்சம் 50 நபர்களுக்கு மேல் பயன்பெறும் வகையில், சாப்பிடும் தரத்தில் உள்ள உணவை பெற்று சென்று, தேவைப்படும் நபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படடும் பசிக்கு உணவின்றிதவப்பவர்களுக்கு பசியைபோக்கும் இந்த புதிய முயற்சியை  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் IAS தொடங்கி வைத்தார்.

மேலும், அதிகபட்சம் 50 நபருக்கு மேல் பயன்படுத்தும் வகையில் உணவு இருந்தால், 9087711112 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உடனடியாக, சம்பந்தப்பட்ட துறையின் ஊழியர்கள் நேரில் வந்து, உணவை பெற்று செல்வார்கள் என அவர் தெரிவித்தார். மேலும், அதற்கான பிரத்யேக வாகனத்தையும் கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வீடு தேடி வந்து தரத்தை பரிசோதிக்க அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, கலைஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.        

சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.