அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.போதைப்பொருட்களை தவிர்ப்போம்!தடுப்போம்!! இளம் தலைமுறையினரை காப்போம்!!!


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 26.06.2022  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  ஜெயங்கொண்டம் நகரத்தில் காவல்துறை சார்பில் ஜெயங்கொண்ட உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைகதிரவன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



 இப்பேரணியில் குமார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி ஜெயங்கொண்டம் யூனியன் ஆபீஸ் அருகே தொடங்கி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், குற்றங்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவு முதலியவற்றை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

REPORTER..ம.மஹேஷ்.அரியலூர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.