திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரை வழங்கிய திருநெல்வேலி சரகDIG


 திருநெல்வேலி காவல் சரக  துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார் IPS அவர்கள், திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்  கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று காவல் நிலையங்களை  ஆய்வு  செய்தார்.

அப்போது சரக டி.ஐ.ஜி அவர்கள் காவல் மரணத்தைத் தடுக்க தமிழக டி.ஜி.பி அவர்கள்  காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளதை எடுத்து கூறியதுடன், காவல் துறையினர் குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் தனியார் இடங்களில் வைத்தோ, காவல் நிலையத்தில் வைத்தோ விசாரணை நடத்தக் கூடாது என்றும், ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டால், மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.