தென்காசிமாவட்டத்தில் பழமையான ஐம்பொன்சிலை மற்றும் இருசக்கரவாகனங்கள் திருடிய திருடர்கள்கைது காவல்குழுவினர்அதிரடி.SP.பாராட்டு



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஆலங்குஔளம், கடையம் பாவூர்சத்திரம், மற்றும் ஊத்துமலை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு, 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2- ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு ஆகியோர்களின் உத்தரவுபடி


பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ், ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சந்திரசேகரன்,

கடையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சரவணன், ஆலங்குளம் தலைமை காவலர் திரு. பாலமுருகன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சேஷகிரி, குற்றப்பிரிவு தலைமைக் காவலர்கள் திரு. மோகன்ராஜ், திரு. குமரேச சீனிவாசன், முதல் நிலைக் காவலர்கள் திரு. திருமலைக்குமார், திரு. சௌந்தரபாண்டியன், காவலர்கள் திரு. மகேஷ், திரு. லிங்கராஜா, தென்காசி சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் திரு. ராஜமனோஜ் மற்றும் திரு. ஜேசு ஆகியோரின் தீவிர விசாரணையிலும் மற்றும் தென்காசி மாவட்டம் முதல் திருச்சி வரையிலான (350 கிமீ) சுமார் 250க்கும் மேற்பட்ட கேமராக்களை பின் தொடர்ந்தும் (இருமுறை), குற்றம் நடந்த இடங்களில் Dump Tower மூலமாகவும் ஆதாரங்களை சேகரித்தும் அதனடிப்படையில்,  பழங்குற்றவாளிகளான கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்விளை, கீழகல்குறிச்சி, கல்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் வினோத்குமார் என்ற முகமது நசீர் (30), திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நம்பி என்பவரது மகன் ரவி என்ற சமீர்(33) (தற்போது இருப்பு) 5/95- பிள்ளையார் கோவில் தெரு, கஸ்பாபுரம், சேலையூர், தாம்பரம், மற்றும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, லட்சுமியூர், 8/115- முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்னபாண்டி  என்பவரது மகன் ராஜகுமார்(31) ஆகியோர் மேற்படி குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வந்தது தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 24/06/2022 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்

மேற்படி குற்றவாளிகளிடமிருந்து தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான லட்சுமியூரில் இருந்து திருடப்பட்ட, சுமார் 300 வருடம் பழமையான தேவிசக்தியம்மன் ஐம்பொன்சிலை ஒன்றும், மணல்காட்டானூரில் திருடப்பட்ட புல்லட் ஒன்றும், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் அருகில் உள்ள வீட்டில் இரவு நேரத்தில் உடைத்து திருடிய  தங்க நகைகளையும், ஆலங்குளம் காவல் நிலைய பகுதியான பூலாங்குளம் என்ற ஊரில் திருடப்பட்ட புல்லட் ஒன்றும், அதே இரவில் ஊத்துமலை காவல் நிலைய பகுதி கடை உடைத்து திருடப்பட்ட பணம், திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் திருடப்பட்ட ஹீரோ கிளாமர் பைக் ஒன்றும், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் திருடப்பட்ட புல்லட் ஒன்றும், திருச்சி மாவட்டம் புதுநத்தம்Ps மற்றும் துவரங்குறிச்சிPS பாரஸ்ட் ஆபீஸ் பகுதியில் திருடப்பட்ட 2 புல்லட்டுகளும் என மொத்தம் 5 ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகள் உட்பட மொத்தம் ஆறு பைக்குகளும் மற்றும் சுமார் 300 வருட பழமையான ஐம்பொன் சிலையும் மீட்க்கப்பட்டது...

மேலும் மேற்படி எதிரிகள் களவிற்கு பயன்படுத்திய TN27A5159 என்ற பதிவு எண் கொண்ட சில்வர் நிற ஆம்னி வேன் மற்றும் ஷட்டரை உடைத்து திருடுவதற்காக வைத்திருந்த, கேஸ் சிலிண்டருடன் கூடிய கேஸ்கட்டர் ஒன்றும் கைப்பற்றபட்டது...மேற்படி எதிரிகளுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நிறைய முன் வழக்குகள் உண்டு.. NBW PENDING இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

நிருபர்.அண்ணாமலை.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.