திருநெல்வேலி சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.


திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS அவர்கள் உத்தரவின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. ராஜ், உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம் ஆகியோர் சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களுக்குச் சென்று  பொதுமக்களுக்கும், பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கும்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும்,சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

அப்போது மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் பேசுகையில், சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றும், எப்படி ஏமாறாமல் இருப்பது என்றும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


அப்போது  மாணவிகளுக்கு  செல்போனில் ஆன்லைன் Game  விளையாடும் போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விளையாடும் போது வரும் தேவை இல்லாத link யை click செய்ய வேண்டாம் என்றும், link யின் மூலம்  ATM card, Bank account பற்றி கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் விளையாட்டு மூலம் அதிக பண மோசடி ஏற்படுவதால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அறிவுரை வழங்கினார்கள்.

 இணையதளம் மூலம் நிதி மோசடி, சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது, தனிப்பட்ட privacy policy பற்றி சைபர் கிரைம் காவல்துறையினர் மாணவிகளிடம் கலந்துரையாடினர். பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.மேலும் 1930 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று கூறியும் அதுகுறித்து பள்ளி மாணவிகளுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அவசர உதவிக்கு காவல் உதவி செயலியை பதிவிறக்கம் வைத்து கொள்ளும் படியும்  மேலும் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்தும்,பேருந்து பயணங்களின் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்கள். 

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.