திண்டுக்கல் மாவட்டத்தில் வயதான தம்பதியிடம் நூதன முறையில் ஏமாற்றி ரூ.76,821/- திருடிய நபரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.



16.06.2022 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் நேருஜி நகரில் வசித்து வரும் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.76,821/- நூதன முறையில் திருடிய நபரின் அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்களை வைத்து உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்(28) என்பவரை கண்டறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உளுந்தூர்பேட்டையில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

மேலும்  பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என்றும், யாரேனும் தங்களுக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால் உடனே 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

நிருபர்.R.குப்புசாமி.


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.