சேலம் மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் அத்யாவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்ஆணையர் நஜ்முல்ஹோதா IPS விழிப்புணர் ஏற்படுத்தினார்.



 06.06.2022 ம் தேதி காலை சேலம் ஐந்துரோடு மற்றும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா ஆகிய இடங்களில்காவல்துறைசார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு.நஜ்முல் ஹோதா IPS அவர்கள் கலந்துகொண்டு,


 சாலையில் அவ்வழியே தலைகவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடையே, தலைகவசம் அணிவதன் அத்யாவசியம், மோட்டார் வாகன சட்டப்படிவிதிமீறல் அதற்கான அபராதம் மற்றும் தலைகவசமின்றி செல்லும்போது ஏற்படும் சாலை விபத்துகளும், இழப்புகளும் பற்றி காணொளிமூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இந்நிகச்சியில் காவல் துணை ஆணையாளர் தெற்கு திரு.N.மோகன்ராஜ் அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம், திரு.K.உதயகுமார் தெற்கு போக்குவரத்து பிரிவு, திரு.N.K.செல்வராஜ் பொறுப்பு கொண்டலாம்பட்டி சரகம், சேலம் மாநகரம் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.T.சரவணன் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

சிறப்புநிருபர் .ஆசிப்முகம்மது

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.