கோவைமாவட்டத்தில் பல்வேறுகாவல்நிலைபகுதிகளில் களவுபோனரசுமார்16லட்சம்மதிப்பிலான செல்போன்கள் தனிப்படைகாவல்குழுவினரால் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த SP.பத்ரிநாராயணன் IPS.




 கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் களவு போன செல்போன்கள் சம்மந்தமாக கோவை மாவட்ட காவல் நிலையங்கள் மூலம்  புகார்கள் பெறப்பட்டு மேலும் புகார்களை விரைந்து கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தொடர்ந்து செல்போன்களின் IMEI நம்பரை TRACE செய்ததன் மூலமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15,75,000/-மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடித்த செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (24.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு செல்போன் தொலைத்த நபர்களை வரவழைத்து அவர்களிடம் செல்போன்களை நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று கடந்த மாதமும் 19,50,000/- மதிப்பிலான 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதுகுறிப்பிடதக்கது .

நிருபர்.P.நடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.