சென்னை சூளை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போதையில் ரகளை செய்த வாலிபர் கைது வேப்பேரி காவல் சரகம் உதவி ஆணையர் ஹரிகுமார் தலைமையில்காவல் குழுவினர் அதிரடி



சென்னை ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த சுரேஷ் இவர் சூளை அங்காளம்மன் கோவில் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார் ஹோட்டலில் குடிபோதையில் புளியந்தோப்பு கே எம் கார்டன் பத்தாவது தெருவை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். 

 

இந்நிலையில் சுரேஷின் ஹோட்டலுக்கு சென்ற விஜய் கடையில் சாப்பிட்டுவிட்டு மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளான் போதையில் இருந்த அவன் என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறி ரகளை செய்தான் இதனை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளர் சுரேஷை கையால் தாக்கி உள்ளான் இதைதொடர்பாக சுரேஷ் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததின்பேரில்  வேப்பேரி காவல் சரக உதவி ஆணையர் G. ஹரிகுமார் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வேப்பேரி காவல் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர் சுரேஷின் ஓட்டலில் விஜய் ரகளை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது விஜய் ஓட்டல் உரிமையாளர் சுரேஷிடம்  போதையில் பணம் கேட்டு மிரட்டுவது தெளிவாக பதிவாகி இருந்தது இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலைய காவல் குழுவினர் கூறும்போது ஹோட்டல் மற்றும் கடைகளில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் வேப்பேரி பகுதியிலுள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் கடைக்காரர்களிடம் யாராவது வந்து உங்களை மிரட்டினால் பணம் கேட்டு ரகளை செய்தால் உடனடியாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவியுங்கள்  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார்கள் வியாபாரிகள் பயப்பட வேண்டாம் என்று காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்

 நிருபர்LNK.ச்சந்தன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.