மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவுப்படிகாவல்துறைசார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும்கூட்டம் தூத்துக்குடி SP.Dr.Lபாலாஜிசரவணன் அறிவிப்பு



 .தமிழகத்தில் மாவட்டம்தோறும் பொதுமக்கள் அளிக்கும் மனுமீதுவிசாரணைசெய்துகுறைதீர்க்கும் கூட்டம் இரு வாரங்களுக்கு ஒருமுறை  முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் - பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் மனு கூட்டத்தை பயன்படுத்தி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள புகார் அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார்.மேலும்

கடந்த 10.05.2022 அன்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 53ன் படி அரசாணை எண் 259 உள்துறை (காவல் 13) இன் கீழ் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.


மேற்படி அறிவிப்பின்படி பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதன்கிழமையில் (முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில்) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. L. பாலாஜி சரவணன் அவர்கள் கூறினார்.

அதுவுமில்லாமல் பொது மக்களின் முந்தைய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த குறைதீர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.

எனவே மேற்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.