Posts

Showing posts from March, 2021

திருச்சி லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆச்சிரமவள்ளி அம்மன் கோயில் திருவிழா தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடந்த மறியலின் போலீஸார் மற்றும் பட்டியல் இன மக்களிடையேஏற்பட்ட மோதலின் போது போலீஸாா் காயமடைந்தனா். இதுதொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.  கோயில் திருவிழாவை செவ்வாய்க்கிழமை ஒரு பிரிவினா் நடத்த முற்பட்டதால் ஆத்திரமடைந்தபட்டியல் இன மக்கள் தங்கள் பகுதிக்கும் சுவாமி வந்து சென்றால்தான் திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறி கோயில் முன் இரவு முழுவதும்போராட்டத்தில் ஈடுபட்டனா்.இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் நீதிமன்ற உத்தரவு பெற்றபின் திருவிழா நடத்தப்படுமெனக் கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டனா்.இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மற்றொரு தரப்பினா் மறியலில் ஈடுபட்டபோது போலீஸாருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸாா் சிலா் காயமடைந்தனா். இது தொடா்பாக பட்டியல் இன மக்கள் 14 பேரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க இப்பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் 200

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில்.காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

Image
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். * அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக நடந்த 17வது தேசிய சாமபியன் போட்டி கன்னியாகுமரியில் 04.03.2021 முதல் 07.03.2021 வரை 4 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, உத்திரபிரேதேசம் மற்றும் டெல்லி ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த 720 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிலுருந்து 200 பேர் கலந்து கொண்டனர். * தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இப்போட்டியில் கோவில்பட்டியிலிருந்து கலந்துகொண்ட மினி சப் ஜூனியர் பிரிவில் 1ம் வகுப்பு மாணவி மானசாஸ்ரீ கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது  இடமும், 1 ம் வகுப்பு மாணவி ஆனந்தலெட்சுமி  கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், 4 ம் வகுப்பு மாணவி ராதிகா ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3 வது இட

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

Image
  வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் புதுக்கோட்டை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. * வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு இன்று (10.03.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூகாம்பிகை மெடிக்கல் முன்பு தொடங்கி சத்திரம் பஸ் ஸ்டாப், பத்திரகாளியம்மன் கோவில் பகுதி, புதுக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், சிவந்தி நற்பணிமன்றம், பஜார், TMB வங்கி, RC சர்ச், யூனியன் அலுவலகம் வழியாக புதுக்கோட்டை காவல் நிலையம் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. * இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பொன்னரசு, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி திரு. ஏ.கே. லேம்கான், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இம்மானுவேல் ஜெயசேகரன் உட்ப

திருச்சிக்கு வந்து உறவினர்களை தவறவிட்ட இளம்பெண் மீட்பு

Image
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திக்கற்று நின்றுகொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த சத்தியா (20) என்ற இளம் பெண் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலமாக மீட்கப்பட்டார்.போலீசார் விசாரித்ததில், "நான் எனது அக்கா மற்றும் அக்கா கணவரோடு சாமி கும்பிட திருச்சி வந்ததாகவும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருவரும் வெவ்வேறு திசையில் சென்று விட்டதாகவும் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை எனக் கூறினார்" உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வரை தற்காலிகமாக கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் திருச்சி நிருபர் சே,மணிகண்டன்

விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம்

Image
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாமில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். * தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் புனித மைக்கேல் மஹாலில் இன்று (07.03.2021) விடிவெள்ளி தன்னார்வ அமைப்பின் 3 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மது அருந்துவோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த மறுவாழ்வு முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். * அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்,  குடி என்பது ஓரு நோயாகும். நாட்டில் பல குற்றங்கள் குடிக்கு அடிமையாவதால்தான்  நடக்கிறது. குடிபழக்கத்தால் நாம் மட்டுமல்லாது நம் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனக்கட்டுப்பாடு மூலம் அதிலிருந்து மீண்டு வர முடியும். குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி குடி

அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நடத்தும் நாடுதழுவிய கருப்பு கொடிஏந்தி ஆர்ப்பாட்டம்.

Image
வேளாண் சட்டங்கள் -2020 கைவிடக்கோரி டெல்லியில் 100 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு  நடத்தும் நாடுதழுவிய  கருப்பு கொடிஏந்தி ஆர்ப்பாட்டம் ஆலங்குளத்தில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா தலைவர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது   மாவட்டத்தலைவர் கணபதி துவக்க உரையாற்றினார்  பீடிசங்க தாலுகா தலைவர் மாரியப்பன், மாதர்சங்க செயலாளர் மல்லிகா  சிஐடியு மாவட்ட துனைபொதுசெயலாளர் மகாவிஷ்ணு விவசாயத்தொழிலாளர் சங்க தாலுகா துனைத்தலைவர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் நிறைவுரை ஆற்றினார் விவசாயசங்க தாலுகா பொருளாளர்  வெற்றிவேல் நன்றிகூறினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டபட்டிசெயலாளர் பரமசிவன்புதுப்பட்டிசெயலாளர் லிங்கராஜ்காசிநாநாதபுரம்செயலாளர் சங்கர் குருவன்கோட்டைசெயலாளர் பால்ராஜ்மாதர் சங்கத்தலைவர் அழகுசுந்தரி,கீழ்பரும்புசெயலாயர் சமுத்திரகனி,5வதுவார்டு செயலார்கதிர்செல்விமுன்னாள்மருதம்புத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் நல்லையா வள்ளியம்மாள் குருவன்கோட்டை அம்பேத்கர்கிளைசெயலாளர் ஆறுமுக

பெரியார் சிலை அவமதித்து தீயிட்டுக் கொளுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்

Image
சமூக சீர்திருத்தத்திற்காவும், மூடநம்பிக்கையை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதிய வேறுபாடுகள், சமய மூடநம்பிக்கை, தீண்டாமை, சனாதன தர்மம் போதிக்கும் நால்வகை சாதிய முறை, வர்ணாசிரமம் போதிக்கும் பார்ப்பனியம், ஆகியவற்றை எதிர்த்து போராடிய வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு சமத்துவபுரம் நுழைவாயில் அருகே சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சிலையை அவமதித்த சமூக விரோதிகளை துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் அனைத்து மக்கள் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்A. முஹம்மத் யூனுஸ்

உடல்நலக் குறைவால் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் 5 குடும்பத்தில் கல்வி பயிலும் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் .

Image
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள்  06.03.2021 காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10 வாரிசுகளுக்கு கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மொத்தம் ரூபாய் 1,92,900/-ஐ வழங்கினார். போலீஸ் பார்வை சிறப்பு நிருபர் அந்தோணி.

தென்காஞ்சி திருநள்ளாறு சனி தலம்மான இந்த கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை!

Image
துத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் உள்ள நாணல்காடு என்ற ஊரில்   அருள்மிகு திருகண்டீஷ்வர் ஆலயம் மிக சிறப்பு வாய்ந்த ஆன்மீக தலம்  தென்காஞ்சி திருநள்ளாறு  சனி தலம்மான இந்த கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது  இந்த கோவில் இந்துஅறநிலையதுறை வசம் உள்ளது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எஎடுக்காமல் கோவில் வருமானத்தை மட்டுமே  எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து வரும் சரித்திரபுகழ்வாய்ந்த இக்கோவிலை உடனடியாக புரணமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபடுகிறது    தவறும் பட்சத்தில் மிகபெரும் அளவில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடைபெறும்   என்பதை தெரிபடுத்தபடுகிறது               ப.பரமசிவம் மாவட்ட பொதுசெயலாளர் ஹிந்து ஆலயபாதுகாப்புஇயக்கம்                      தூத்துக்குடி மாவட்டம்                செல் 94865553588

மகாத்மா கண் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி மர்மமான முறையில் மரணம்.

Image
புதுக்கோட்டை இலுப்பூர் தாலுக்கா கலிங்கன்ப்பட்டியை சேர்ந்த ரெங்கன் சாரதா வின் மகள் உமா வயது 20 இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த உமாவின் உறவினர் ஆனந்தன் என்பவருக்கும் உமா விற்கும் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ஆனந்தன் மனைவி  திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயிற்சி செவிலியராக மகளிர் விடுதியில் தங்கி படித்துகொண்டு  வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று இரவு உமாவின் உறவினரான அக்காவிற்கு மருத்துவமனையிலிருந்து தொடர்புகொண்டு உமா இறந்துவிட்டதாகவும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர், தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக திருச்சி மருத்துவமனைக்கு வந்து பார்க்கும் பொழுது அவர் இறந்து இருப்பதைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர் மர்மமான முறையில் எந்த ஒரு நோயும் இல்லாமல் எப்படி உமா இருந்திருக்க முடியும் என உறவினர்கள் உமாவின் உடலை வாங்க மறுத்து திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனைக்கு சென்று எப்படி இறந்தார் என்று கேட்டதற்கு மருத்துவமனையில் இருந்து சரியான பதில் வராததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்

கிராமங்களில் 100 சதவீதம் வாக்குபதிவு பற்றிய விழிப்புணர்வு

Image
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், 065 கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் வாக்குபதிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்(EVM) மற்றும் VVPAT மூலம் வாக்குப்பதிவு ஒத்திகை நடைபெற்றது.  இதில் கீழ்கண்ட கிராமங்கள் கோவிலூர், ஜமுனாமரத்தூர், வீரப்பனூர், ஜீமரத்தூர், குண்டா லத்தூர், சேராமரத்தூர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு முகாமில் வட்டாட்சியர் ஜமுனாமரத்தூர், தேர்தல் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் புலியூர், நம்மியம்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள்(BLO) உடனிருந்தனர்.      சிறப்பு நிருபர் இரா.சக்தி வேல்.

போர்வெல் உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டம்.

Image
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போர்வெல் இயக்குவதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களான டீசல், உதிரி பாகங்களின் விலை, மற்றும் பைப் விலை உயர்வை கண்டித்தும், குறிப்பாக பிவிசி பைப்புகள் 70% உயர்த்தப்பட்டும், உதிரி பாகங்கள் மற்றும் பிட் ஆகியவற்றின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டும் இருக்கிறது. தற்போது போர்வெல் உரிமையாளர்கள் புதிய ட்ரில்லிங் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தியதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக திருச்சி மன்னார்புரம் மதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள கல்குவாரி மைதானத்தில்  திருச்சி புதுக்கோட்டையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வேலை நிறுத்தம் ஆனது பிப்ரவரி 4-ஆம் தேதி இன்று  துவங்கி வரும் 7ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பிலால், மதன்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்சி விராலிமலை மணப்பாறை கீரனூர், புள்ளம்பா

அகலசியாகார்டியா அரியவகை நோயை குணப்படுத்திய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்.

Image
திருச்சி காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய செல்லத்துரை என்பவருக்கு வாந்தி மற்றும் குமட்டலினால் ஆறு மாத காலமாக தூக்கமில்லாமல் தவித்து தவித்து வந்த நிலையில் திருச்சி அப்போலோ  மருத்துவமனை குடல் மற்றும் வயிற்று சிறப்பு மருத்துவர் Dr. SNK. செந்தூரனை சந்தித்தார். மருத்துவர் நோயாளியை பரிசோதித்ததில், பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடிய “அகலசியாகார்டியா” எனப்படும் அரியவகை நோய் உள்ளதை கண்டறிந்து அகலசியாகார்டியா நோயினை அப்போலோ மருத்துவர்கள் முற்றிலுமாக சரி செய்துள்ளனர். அகலசியாகார்டியா எனப்படும் நோயின் தன்மை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவர்கள் கூறுகையில் “அகலசியாகார்டியா” எனப்படும் நிலையினால் உணவுக்குழாய் மற்றும் உணவுகுழாய்க்கும் வயிற்றிற்கும் இடையே இருக்கும் தசைவால்வு, உணவு விழுங்களின் போது நெகிழ்வுதன்மையை இழந்து விடுகிறது. இதனால் உணவு வயிற்றின் உள்ளே செல்வது தடைபட்டு நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, எடைகுறைவு மற்றும் இரவு வாந்தியினால் தூக்கமின்மை ஏற்படுகிறது.     இப்பிரச்னைக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை அல்லது லேபராஸ்கோபி மூலமாகவே தீர்வு என்ற ந

தமிழக சட்டப்பேரவை 2021 தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் உத்தரவு.

Image
தமிழக சட்டப்பேரவை 2021 தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார். * அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். * இந்நிலையில் இன்று (03.03.2021) தூத்துக்குடி மாதாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் மகன் பலவேசம் என்ற குரங்குமுத்து (36) மற்றும் ராஜேந்திரன் மகன் மகேந்திரன் (37) ஆகியோர் தாளமுத்துநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் - சோட்டையன்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் வழக்கு பதிவு செய்து  பலவேசமுத்து என்ற குரங்குமுத்து மற்றும் மகேந்திரன் ஆகிய இருவ

அய்யா 189 பிறந்தநாளை முன்னிட்டு கடலில் பதம் விடும் நிகழ்ச்சி

Image
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டபதியில் அய்யா 189 பிறந்தநாளை முன்னிட்டு கடலில் பதம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர், இரவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, நடைபெற்றது 6.30 மணிக்கு கடற்கரையில் பதம் விடும் நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அய்யாவழி அகில திருக்குடும்பத்தினர்கள் சென்றனர்.  6.40 மணிக்கு சூரிய உதயம் ஆனவுடன் கடலில் பதம் விட்டனர். பின்னர் அய்யா பதிக்கு சென்று பணிவிடை செய்தனர்.பின்பு உச்சிப் பிடிப்பு, அன்னதர்மம் நடைபெற்றது. பதம் விடும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் அனைவரும் கடலில் நீராடினார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுத்துரைபொருளாளர் ராமைய்யா உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். நிருபர்- S அய்யப்பன்

சூளகிரி அருகே தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் ரூபாய் 4,29,000 பறிமுதல்

Image
  தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் ரூபாய் 4,29,000 பறிமுதல்   கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபரப்பள்ளி சந்திப்பு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏணுசோனை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரின் காரில் அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தினேஷ் நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டுவந்ததாக கூறினார். அப்போது அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.. செய்தியாளர்  A. முஹம்மத் யூனுஸ்

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்த கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு...

Image
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக திமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் பிளக்ஸ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள்  வாகன சோதனைகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தில் திமுக கட்சி சார்பில் சுவர் விளம்பரம் மற்றும் சின்னங்களை வரைந்து எழுதியது தொடர்பாக  திருச்சி மாநகராட்சி 64-வது வார்டுவட்ட செயலாளர்  சோமகுணாநிதி என்பவர் மீதும், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் விளம்பரம் செய்திருந்த மன்ற நிர்வாகி ஹைதர் பாய் மீதும் திருவெறும்பூர் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறி காட்சி விளம்பரங்களை சுவர் எழுதியதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் நவல்பட்டு பெல் நிறுவன மதில் சுவரில் விளம்பரம் செய்திருந்த நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர்

மண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது.

Image
அதிமுக பிரமுகர் மணல் குணா   தப்பியோட்டம்  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகே   மாதவப்பெருமாள் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி மாட்டு வண்டிக்கா கடந்த 2 மாதமாக செயல்படுகிறது.  இந்த மணல் குவாரியில்  அப்பகுதியைச சேர்ந்த அதிமுக   இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மண்ணச்சநல்லூர்   ஒன்றிய துணைச் செயலாளர்   மணல் குணா மூலம், மணல்  திருடி லாரிகள் மூலம் திருச்சி,  மதுரை, சென்னை உள்ளிட்ட  பகுதிகளுக்கு மணல்.  கடத்துவதாக போலீஸ்  உயரதிகாரிகளுக்குதொடர்ந்து  புகார்கள்  சென்றன. இதன் அடிப்படையில் திருச்சி   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு எஸ்ஐ நாகராஜ்   தலைமையிலான போலீஸார்   அதிகாலை மாதவப்பெருமாள்  ஊராட்சியில் பகுதியில் உள்ள  கொள்ளிடம் ஆற்றில் மணல்  திருட்டில் ஈடுபட்டிருந்த  7 பேரை கைது செய்தும், 8 மாட்டு வண்டிகளையும்,  சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்  தலைமையிலான எஸ்.பியின்  தனிப்பிரிவு போலீசார் மடக்கி  பிடித்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதில்  அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை  மண்ணச்சநல்லூர் ஒன்றிய  துணைச் செயலாளர் மணல் குணா தப்பியோடினர். இந்த த

திருச்சி பலக்கரையில் வீரா உடல்பயிற்சி கூடம் மூன்றாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

Image
திருச்சி பலக்கரையில் வீரா உடல்பயிற்சி கூடம் மூன்றாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று அதனை கருத்தில் கொண்டு வீரா உடற்பயிற்சிக்கூடதின் உரிமையாளர் ராகுல் ராஜ்  மூன்றாவது கிளையை திறந்து வைத்தார்.  திருச்சி பாலக்கரை காஜா பேட்டை, கிராப்பட்டி, பகுதியில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் பயிற்சி எடுப்பதற்கு அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கி வரும் நிலையில்,  புதிதாக மூன்றாவது கிளை பலக்கரை பகுதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது,  அப்போது கூறிய உரிமையாளர் இங்கு கிராஃப்ட் ஒர்க் கோட், ப்ளோர் ஒரு கோட், புதிதாக  ஸ்ஸ்லச் ஒர்க்கவுட் உள்ளது. அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் உடல்நிலைக்கு நல்லது குறிப்பாக இந்த கோரோணா அக்காலகட்ட நேரத்தில் அனைவருக்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எங்களது பெட்டினஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல அனைவரும் உடற்பயிற்சி செய்வதினால்  பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனவே ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் பயிற்சி என்பது மி