தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்த கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு...

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக திமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் பிளக்ஸ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள்  வாகன சோதனைகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தில் திமுக கட்சி சார்பில் சுவர் விளம்பரம் மற்றும் சின்னங்களை வரைந்து எழுதியது தொடர்பாக  திருச்சி மாநகராட்சி 64-வது வார்டுவட்ட செயலாளர்  சோமகுணாநிதி என்பவர் மீதும், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் விளம்பரம் செய்திருந்த மன்ற நிர்வாகி ஹைதர் பாய் மீதும் திருவெறும்பூர் போலீசார் தேர்தல் நடத்தை விதிகளை மீறி காட்சி விளம்பரங்களை சுவர் எழுதியதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் நவல்பட்டு பெல் நிறுவன மதில் சுவரில் விளம்பரம் செய்திருந்த நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இது சம்பந்தமாக ஒன்றிய நிர்வாகி விக்டர் என்பவர் மீதும் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறப்புநிருபர்.

ந.ராக்கேஷ்சுப்ரமணி


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.