விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம்



தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாமில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.*

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் புனித மைக்கேல் மஹாலில் இன்று (07.03.2021) விடிவெள்ளி தன்னார்வ அமைப்பின் 3 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மது அருந்துவோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த மறுவாழ்வு முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.*

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்,  குடி என்பது ஓரு நோயாகும். நாட்டில் பல குற்றங்கள் குடிக்கு அடிமையாவதால்தான்  நடக்கிறது. குடிபழக்கத்தால் நாம் மட்டுமல்லாது நம் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனக்கட்டுப்பாடு மூலம் அதிலிருந்து மீண்டு வர முடியும். குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி குடி பழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்றும், நீங்கள் மீண்டு வந்தால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் நல்லது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.*
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. நிக்கோலஸ் மற்றும் உறுப்பினர் திரு. சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.*

*இந்த முகாமில் தருவைக்குளம் பங்குதந்தை திரு. எட்வர்ட், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், குளத்துர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 70 பேர் கலந்து  கொண்டனர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.