போர்வெல் உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டம்.



திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போர்வெல் இயக்குவதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களான டீசல், உதிரி பாகங்களின் விலை, மற்றும் பைப் விலை உயர்வை கண்டித்தும், குறிப்பாக பிவிசி பைப்புகள் 70% உயர்த்தப்பட்டும், உதிரி பாகங்கள் மற்றும் பிட் ஆகியவற்றின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டும் இருக்கிறது. தற்போது போர்வெல் உரிமையாளர்கள் புதிய ட்ரில்லிங் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தியதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக திருச்சி மன்னார்புரம் மதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள கல்குவாரி மைதானத்தில் 



திருச்சி புதுக்கோட்டையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வேலை நிறுத்தம் ஆனது பிப்ரவரி 4-ஆம் தேதி இன்று  துவங்கி வரும் 7ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பிலால், மதன்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்சி விராலிமலை மணப்பாறை கீரனூர், புள்ளம்பாடி, டால்மியாபுரம் மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த போர்வெல் உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.