தமிழக சட்டப்பேரவை 2021 தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் உத்தரவு.


தமிழக சட்டப்பேரவை 2021 தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.*

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.*

இந்நிலையில் இன்று (03.03.2021) தூத்துக்குடி மாதாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் மகன் பலவேசம் என்ற குரங்குமுத்து (36) மற்றும் ராஜேந்திரன் மகன் மகேந்திரன் (37) ஆகியோர் தாளமுத்துநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் - சோட்டையன்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் வழக்கு பதிவு செய்து  பலவேசமுத்து என்ற குரங்குமுத்து மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.*

இதே போன்று இன்று (03.03.2021) தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயர் காலணியைச் சேரந்த செட்டி பெருமாள் மகன் முனிஷ்வரன் என்ற நன்டால் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட S.S மாணிக்கபுரம் சந்திப்பில் அவ்வழியாக வந்த ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா வழக்கு பதிவு செய்து முனிஷ்வரன் என்ற நன்டால் என்பவரை கைது செய்தார்.*

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த போத்தா ரவியின் மகன் வேல்முருகன் என்ற பண்ணாவேல்முருகன் மற்றும் திருச்செந்தூர் ரோடு ராஜபாண்டிநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சீனு என்ற இந்திரன் ஆகியோர் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் என்ற பண்ணாவேல்முருகன் மற்றும் சீனு என்ற இந்திரன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.*  

மேற்படி எதிரிகளை கைது செய்த சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர். N.ராமசாமி

செய்தியாளர்

செய்தியாளர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.