மண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது.


அதிமுக பிரமுகர் மணல் குணா   தப்பியோட்டம்


 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகே   மாதவப்பெருமாள் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி மாட்டு வண்டிக்கா கடந்த 2 மாதமாக செயல்படுகிறது.

 இந்த மணல் குவாரியில்  அப்பகுதியைச சேர்ந்த அதிமுக   இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மண்ணச்சநல்லூர்   ஒன்றிய துணைச் செயலாளர்   மணல் குணா மூலம், மணல்  திருடி லாரிகள் மூலம் திருச்சி,  மதுரை, சென்னை உள்ளிட்ட  பகுதிகளுக்கு மணல்.  கடத்துவதாக போலீஸ்  உயரதிகாரிகளுக்குதொடர்ந்து  புகார்கள்  சென்றன.
இதன் அடிப்படையில் திருச்சி   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு எஸ்ஐ நாகராஜ்   தலைமையிலான போலீஸார்   அதிகாலை மாதவப்பெருமாள்  ஊராட்சியில் பகுதியில் உள்ள  கொள்ளிடம் ஆற்றில் மணல்  திருட்டில் ஈடுபட்டிருந்த  7 பேரை கைது செய்தும், 8 மாட்டு வண்டிகளையும்,  சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்  தலைமையிலான எஸ்.பியின்  தனிப்பிரிவு போலீசார் மடக்கி  பிடித்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
இதில்  அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை  மண்ணச்சநல்லூர் ஒன்றிய  துணைச் செயலாளர் மணல் குணா தப்பியோடினர்.


இந்த திருட்டு சம்பவம் குறித்து  மண்ணச்சநல்லூர் காவல்  ஆய்வாளர் இளவரசன் ஐபிசி 379  மற்றும் மைன்ஸ் மினரல் ஆக்ட்  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நொச்சியம் பகுதியைச் சேர்ந்த ரவி, கோபிநாத், லோகேஸ்வரன்,  லட்சுமணன், , ரஞ்சித் குமார்,  மற்றும் முசிறி அய்யம்பாளையம்  பகுதியைச் சேர்ந்த ரஜினி ஆகிய 7 பேரை கைது செய்தும்,  மணல்  கடத்தலுக்கு மூளையாக செயல்  பட்ட மணல் குணா வுக்கு  சொந்தமான மாடு மற்றும் மணல்  அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டி உள்ளிட்ட 8 வண்டி, மற்றும் 6 செல்போன்கள், 3 டூ வீலர்கள் உள்ளிட்டவைகளை  பறிமுதல் செய்தும், தப்பியோடிய  மணல் குணாவை  மண்ணச்சநல்லூர் போலீஸார் தேடி வருகின்றனர்..

 


Comments

Post a Comment

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.