பெரியார் சிலை அவமதித்து தீயிட்டுக் கொளுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்



சமூக சீர்திருத்தத்திற்காவும், மூடநம்பிக்கையை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதிய வேறுபாடுகள், சமய மூடநம்பிக்கை, தீண்டாமை, சனாதன தர்மம் போதிக்கும் நால்வகை சாதிய முறை, வர்ணாசிரமம் போதிக்கும் பார்ப்பனியம், ஆகியவற்றை எதிர்த்து போராடிய வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு சமத்துவபுரம் நுழைவாயில் அருகே சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சிலையை அவமதித்த சமூக விரோதிகளை துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் அனைத்து மக்கள் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்A. முஹம்மத் யூனுஸ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.