அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில்.காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.*

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக நடந்த 17வது தேசிய சாமபியன் போட்டி கன்னியாகுமரியில் 04.03.2021 முதல் 07.03.2021 வரை 4 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, உத்திரபிரேதேசம் மற்றும் டெல்லி ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த 720 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிலுருந்து 200 பேர் கலந்து கொண்டனர்.*தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இப்போட்டியில் கோவில்பட்டியிலிருந்து கலந்துகொண்ட மினி சப் ஜூனியர் பிரிவில் 1ம் வகுப்பு மாணவி மானசாஸ்ரீ கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது  இடமும், 1 ம் வகுப்பு மாணவி ஆனந்தலெட்சுமி  கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், 4 ம் வகுப்பு மாணவி ராதிகா ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3 வது இடமும் பெற்றுள்ளனர்.*சப் ஜூனியர் பிரிவில் 7 ம் வகுப்பு மாணவி மகாநந்தினி ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 2 வது இடமும், 11ம் வகுப்பு மாணவி வெற்றி கார்த்திகா இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், 11ம் வகுப்பு மாணவர் சரவணன் இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது இடமும்,*சீனியர் பிரிவில் கல்லூரி மாணவிகளான மகரஜோதி மான்கொம்பு வீச்சு பிரிவில் முதல் இடமும்,  கீர்த்தனா ஒற்றை வாள் வீச்சு பிரிவில் முதல் இடமும், காயத்ரி இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், அனிதா பிரின்ஸி குத்துவரிசை பிரிவில் முதல் இடமும், கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும் பெற்றுள்ளனர். மொத்தம் 3 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர்.*

 இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்கள்  இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகள் பெறுமாறு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி தமிழ் கல்சுரல்ஸ் ட்ரஸ்ட் அகாடமியின் ஆசான்களான  கணபதி,  சோலை நாராயணன் மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

செய்தியாளர் ஐயப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.