மகாத்மா கண் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி மர்மமான முறையில் மரணம்.

புதுக்கோட்டை இலுப்பூர் தாலுக்கா கலிங்கன்ப்பட்டியை சேர்ந்த ரெங்கன் சாரதா வின் மகள் உமா வயது 20 இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த உமாவின் உறவினர் ஆனந்தன் என்பவருக்கும் உமா விற்கும் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ஆனந்தன் மனைவி  திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயிற்சி செவிலியராக மகளிர் விடுதியில் தங்கி படித்துகொண்டு  வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று இரவு உமாவின் உறவினரான அக்காவிற்கு மருத்துவமனையிலிருந்து தொடர்புகொண்டு உமா இறந்துவிட்டதாகவும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்,

தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக திருச்சி மருத்துவமனைக்கு வந்து பார்க்கும் பொழுது அவர் இறந்து இருப்பதைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர் மர்மமான முறையில் எந்த ஒரு நோயும் இல்லாமல் எப்படி உமா இருந்திருக்க முடியும் என உறவினர்கள் உமாவின் உடலை வாங்க மறுத்து திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனைக்கு சென்று எப்படி இறந்தார் என்று கேட்டதற்கு மருத்துவமனையில் இருந்து சரியான பதில் வராததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி மற்றும் தில்லைநகர் பகுதி காவல் ஆய்வாளர் தயாளன் உமா உறவினர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உமாவின் உடல் பரிசோதனைக்கு பிறகு எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் அத்துடன் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் இந்நிலையில் பயிற்சி செவிலியர் உமா இறந்தது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.