Posts

Showing posts from January, 2023

தர்மபுரி வக்கீல் சிவகுமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம் மாவட்டSP.சரோஜ்குமார்தாக்கூர் IPS தகவல்.

Image
  கிருஷ்ணகிரி மாவட்ட SP. சரோஜ்குமார் தாக்கூர் IPS நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  கிருஷ்ணகிரியில் 10 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கள்ளச்சந்தை மது விற்பனை, புகையிலை பொருட்கள் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம். 2 நாட்களில் முழு விவரம் தரப்படும். ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற தும்மனப்பள்ளி ஜெகதீஷ், ஆவலப்பள்ளி சம்பங்கிராம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அதேபோல கட்டப்பஞ்சாயத்து குறித்து புகார்கள் வந்துள்ளன. அவற்றை விசாரித்து அதிலும் கைது நடவடிக்கை தொடரும். ஓசூர், கிருஷ்ணகிரியில் இதுகுறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரச்சினை, ஆட்டோ பைனான்ஸ் பிரச்சனை குறித்து மக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் கண்டிப்பாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். கடந்த 2 வாரத்தில், தனிப்படை போலீசார் சோதனையில் 1,460 கிலோ புகையிலை பொருட்கள், 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்ப

திருச்சிமாநகரில் சட்ட ஒழுங்கைபாதுகாத்து குற்றசம்பவங்களால் மக்கள் அச்சமின்றிவாழ துரிதநடவடிக்கையில் காவல் ஆணையர் .M.சத்தியப்பிரியா, IPS

Image
 திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, IPSஅவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரணை செய்யவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். அதனால் காவல் நிலையங்களின் கோப்புகள் சரியாக பராமரிக்கப்பட்டு, குற்றங்கள் குறைந்தும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது. திருச்சி மாநகரத்தில் உள்ள கோட்டை காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களின் புகாரின் மீது சட்டரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுத்தும் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகள் முறையாக பராமரிக்கபட்டும், வழக்குகளை விரைவாக புலன்விசாரணை செய்தும், வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்தும், வழக்குகளை விரைந்து முடிக்க தகுந்த ஆவணங்களை நீதிமன்றதிதில்

பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய கேரளா இளைஞர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல் அமலாக்கபிரிவுகாவல்துறையினர் அதிரடி.

Image
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பேருந்து நிலையத்தில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவருடைய உடைமைகளை சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் கேரளா, திரிச்சூரை சேர்ந்த செபின்(23), என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து விட்டு சொந்த ஊர் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்தது.  அவர் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைமேற்க்கொண்டனர். சிறப்புநிருபர்.ம.சசி.

தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிDGP.Dr.C.சைலேந்திரபாபு IPS பாராட்டு.

Image
  தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணியினரை  DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள். துணைஆசிரியர்.S.சுந்தர்.

கோவை மாவட்டம்போதை பொருள் இல்லாத கிராமமாக உருவாக்குவோம் காவல்துறையுடன் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு.

Image
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதை பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன், IPS  அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனையின்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன்,IPS  அவர்களின் உத்தரவின் பேரில், (26.01.2023) கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக காவல்துறையுடன் இணைந்து ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 118, பஞ்சாயத்துக்கு உட்பட்ட 231 கிராமங்களில் போதை பொருள் இல்லாத கிராமங்களாக கிராமங்களில் அறிவித்து போதை பொருள் இல்லா கிராமம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. போதைப் பொருட்களுக்கு எதிராக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன், IPS அவர்களின் முன்னெடுப்பின் பேரில் கடந்த ஆண்டு (2022), 1821கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள்* மீது 1532 வழக்குகள் பதிவு

மத்தியமண்டல IG.G.கார்த்திகேயன் IPS தலைமையில் திருவாரூரில் மாவட்டகாவல்அலுவலகத்தில் குற்ற ஆய்வுகூட்டம்

Image
  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG திரு.G.கார்த்திகேயன், IPS அவர்கள் தலைமையில்  (24.01.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர்DIG. திரு.T.ஜெயச்சந்திரன்., IPS திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார்.,B.E., M.B.A., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K.வெள்ளத்துரை மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள். தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.

ஒசூர் அருகே சாலையில் காரில் வைத்து வழக்கறிஞர் சிவகுமார் கழுத்துநெரித்து கொலை செய்து கொலையாளிகள் தப்பி ஓட்டம் வலைவீசி தேடிவரும் காவல்துறையினர்

Image
.  கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகில் சாலையோரம் கார் ஒன்று  23-01-23 இரவு நீண்டநேரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.  அப்போது காருக்குள் ஒருவர் வெள்ளை நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலை இருக்கைக்கு கீழ்புறமாகவும், கால்கள் மேல்புறமாகவும் தலைகீழாக உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசார் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த நபரின் உடலில் சோதனை செய்த போது அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் சிவக்குமார் (வயது 44), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா பொம்மஅள்ளி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் என்றும் வக்கீல் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.  அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:- சிவக்குமார் தர்மபுரி மாவட்ட கோர்ட்டில்

கோவை மாவட்டம்சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

Image
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், IPS அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.  அதன் அடிப்படையில்   சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை  விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம்   பேருந்து நிலையத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரகுமார் என்பவரது மகன் பப்ளு குமார் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600  கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவி

லால்குடி தகாத உறவில் குழந்தைபிறந்ததால் பெற்றதாயே குழந்தையைவிற்ற அவலம் டெல்லியில் சென்று குழந்தையைமீட்டுவந்த DSP.அஜய்தங்கம் காவல்குழுவினர்.

Image
   திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (32). இவர் திருமணமாகாத நிலையில் தகாத உறவின் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிறந்து 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த 2022 செப்டம்பர் 23ம் தேதி விற்பனை செய்தனர். குழந்தையை கடத்திச் சென்றதாக நாடகமாடிய குழந்தையின் தாய் ஜானகி, அவரது வழக்கறிஞர் பிரபு, இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா ஆகிய 4 பேரை லால்குடி போலீஸார் ஜனவரி 8 ம் தேதி கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து, லால்குடி  துணை காவல்கண்காணிப்பாளர் DSP .திரு.அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயணி, விசாரணை நடத்திய நிலையில், DSP. தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜானகியின் குழந்தை என்ன ஆனது என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சண்முகபிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜானகியின் குழந்தை புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்பதற்காக லால்குடி DSP. அஜய்தங்கம், சமயபுரம்

சென்னை புத்தககண்காட்சியை அழகியமணல்சிற்ப்பமாய் வடிவமைத்து பலரின்பாராட்டினை பெற்ற திருநங்கை பிரகிதிக்கு விருதுவழங்கி பாராட்டிய காவல்ஆய்வாளர் G.முத்துசுப்ரமணியன்

Image
 .  மறைமலைநகர் T9 காவல் நிலையத்தின்காவல் ஆய்வாளராக பணிபுரிபவர்  G.முத்துசுப்பிரமணியன்.இவர் பல சமூகபணிகளை தொடர்ந்து செய்து பல இளைஞர்களின் வழி காட்டியாக விளங்கி வருகின்றார். மறைமலைநகரை சார்ந்த திருநங்கை பிரகதி ஓவியம் மற்றும் சிற்பகலையில் பட்டப்படிப்பை முடித்து பல சாதனைகளை செய்து வருகின்றார்.தற்போது சென்னை புத்தக கண்காட்சியை மணல் சிற்பமாக வடிவமைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்என்பதுகுறிப்பிடதக்கது இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில், காவல் ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் அவர்கள் விருது வழங்கி ,பாராட்டுக்களை தெரிவித்தார்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக காவல்துறை என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியை RED GOLD BLOOD DONORS TRUST,REG NO:4/254/2022  என்ற தனியார் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் சமூகஆர்வலர்கள்V.M.முருகன், H.சுஜித் குமார், ரங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். நிருபர்.H.சுஜித்குமார்.

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர்.சாமித்துரை

Image
மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர்புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர் சாமித்துரை மதுரை சிறையில் செயல்படும் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை மூத்த வழக்கறிஞர் சாமித்துரை வழங்கினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடந்த விழாவில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில், சிறைத்துறை DIG. திரு.பழனி IPS, கூடுதல்காவல் கண்காணிப்பாளர் திரு.வசந்தக்கண்ணன் ஆகியோர் அவற்றை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாஸ்கரன் பேசியதாவது, “மதுரை மகத்தான ஊர். இங்குள்ள மத்திய சிறைத்துறை நிர்வாக முயற்சியில் கைதிகளின் மறுவாழ்வுக்கு நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.  நூல்கள் வாங்குவது, பராமரிப்பது என்பது சிரமமான ஒன்று. மத்திய சிறையில் நூலகம் தொடங்கியிருப்பது, சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. சிறைவாசிகளுக்கு நல்வழி காட்டும் நோக்கில் செயல்படும் இந்நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை வழக்கறிஞராக, சமூக ஆர்வலராக சாமித்துரை வழங்குகிறார். இது ஒரு தொடக்கம் என்றாலும், தொடர்ந்து வழங்கவேண்டும். இதன்மூலம் பெரிய நூலகமாக வளரவேண்டும். சமூகத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கு

தூத்த்துக்குடி போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்போட்டி SP.Dr.L.பாலாஜிசரவணன் துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம்

Image
தருவை மைதானத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" ("ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs”)  என்ற அடிப்படையில் விழிப்புணர்வு ”மினி மாரத்தான்” போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி  (22.01.2023)  காலை 6 மணியளவில்  தூத்த்துக்குடி போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்போட்டி SP.Dr.L.பாலாஜிசரவணன் துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம்  தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத

கீழேதங்கநகையுடன் கிடந்தபையை காவல்நிலைத்தில்ஒப்படைத்த கார்த்திக் SP.பாராட்டு.

Image
 19.01.2023 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சரகம் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே கீழே கிடந்த பையிலிருந்த 12 சவரன் தங்க நகைகளை எடுத்து அதை உடனே வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த திரு. கார்த்திக் அவர்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்கள். Reporter.R.Kuppusamy.

கோயம்புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாவட்ட காவல்துறையினருக்கான புலனாய்வு பயிற்சி வகுப்புகள் பணியிடை பயிற்சி மையத்தில் கோயம்புத்தூர் சரக DIG. C.விஜயகுமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Image
கோயம்புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ,மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், மாநகரங்களை சேர்ந்த சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் அதிகாரிகளுக்கான புலனாய்வு பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர் பணியிடை பயிற்சி மையத்தில் கோயம்பத்தூர் சரக காவல் துணைத் தலைவர் DIG. திரு. C. விஜயகுமார் IPS அவர்களது அறிவுரையின்படி கடந்த 09- 01- 2023 முதல் 14-01-2023 வரை 6 நாட்கள் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. A.அறிவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.S. ராஜேஸ்வரி ஆகியோர் ஏற்பாட்டின் படி நடைபெற்றது.  இப்பயிற்சி வகுப்பில் கோயம்புத்தூர் சரகத்தில் குற்றங்களை தடுக்கவும் குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும் நீதிமன்ற நடவடிக்கைகளில் புலனாய்வு அதிகாரிகள் திறம்பட செயல்படவும் சிறப்பான வகுப்புகள் நடத்தப்பட்டன.  மேலும் புலனாய்வு நடைமுறைகள் சைபர் குற்றங்கள் சாலை விபத்துகளில் அதிகப்படியான மரணங்கள் பற்றிய வழக்கு புலனாய்வு(Multiple Deaths in Accident Cases),  சாதி மத கலவரங்களை கையாளும் உத்தி (Caste/ Communals Clash) அறிவியல் உத்திகளை பயன்படுத்தி கொள்ளை

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் 1100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது காவல்துறையினர் அதிரடி.

Image
  இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPSஅவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.  அதன் அடிப்படையில்  காரமடை பகுதியில் போதைப்   பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள் தலைமையில்  காரமடை  காவல்துறையினர் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சம்பவ இடமான பாலாஜி நகர்க்கு விரைந்து சென்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஷேக் சாவூத்  என்பவரது மகன் காஜா மொய்தீன்(48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார்  ரூ.6,50,000 /- மதிப்புள்ள 1100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் ,  நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் - 2 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். போதைப் பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை

திருநெல்வேலிமாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை வழங்கி SP.பாராட்டு.

Image
2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று  முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் குழந்தைச் செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள்,  குழந்தைகளுக்கு வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.  மேலும் அவர்கள் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 2022 அவிஷ்கார்லீக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு அருப்புகோட்டை பள்ளிமாணவிகள்

Image
 .  தேசிய அளவிலான அவிஷ்கார் லீக் 2022 போட்டியானது புது டெல்லியில்  உள்ள ப்ரூடென்ஸ் பள்ளியில் ( அசோக் விஹார் )நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு ,கேரளா ,மகாராஷ்டிரா ,டெல்லி ,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் IRC league மற்றும் Avishkaar Makeathon என 2 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. முதல் சுற்று ஆன்லைன் வழியாக நடைபெற்றது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் மட்டும் டெல்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.  நமது தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செல்வி K. ஐஸ்வர்ய லட்சுமி, செல்வி R. மதுமிதா ஆகியோர் Avishkaar Makeathon போட்டியில் வழிகாட்டி ஆசிரியை K. இந்துமதி மற்றும் B. ராமலக்ஷ்மி ஆகியோருடன் பங்கேற்றனர்.  டெல்லியில் கடும் குளிர் வாட்டி வரும் இந்த காலத்திலும் அதை பொருட்படுத்தாது மாணவிகள் பங்கேற்றனர் . அங்கு தங்களுடைய கண்டுபிடிப்பான செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளி ஓட்டுநர்களுக்கு பயன்படக்கூடிய Confy aid என்ற படைப்பை செயல்முறை விளக்கம் காட்ட

இந்தியகாவல்துறை துப்பாக்கிசுடும் போட்டியை துவக்கிவைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம்வழங்கி DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.பாராட்டு.

Image
   23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.  போட்டியின் முதல் நாள் 25 கஜம் ஆண்கள் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் வீரர் திரு.கணேஷ் குமார் முதல் இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை காவலர் திரு. சதி சிவனேஷ் மூன்றாவது இடத்தையும், 15 கஜம் ஆண்கள் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் வீரர் திரு. இம்னோக் யான்சு முதல் இடத்தையும்,  100 மீட்டர் ரைபிள் சுடும் பிரிவில் அசாம் காவல் துறை அவில்தார் திரு. அபூர்வா தபில்தார் முதல் இடத்தை பெற்றார்.  வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.முதன்மைஆசிரியர் S.முருகானந்தம்.

தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற வீரர்களை நேரில் அழைத்து பாராட்டிய மதுரை மாவட்ட SP.சிவாபிரசாத் IPS.

Image
மதுரை மாவட்டத்தில் Madurai District Master Athletic Association  மூலம்  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரியில் நடந்த தடகள  விளையாட்டு போட்டியில், பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர்கள் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்ற  திரு. ராஜா த.கா 868, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றும்,   திரு. கார்த்திகேயன் த.கா 14 81,  400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம்,  200 மீட்டரில் வெண்கல பதக்கமும், தொடர் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றும், திரு.வீரபாபு மு.நி.கா 443 என்பவர், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்கள்.  விளையாட்டு போட்டிகளில்  பதக்கம் பெற்ற காவலர்களை, இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. சிவா பிரசாத் IPS.  அவர்கள் நேரில் அழைத்து உற்சாகப்படுத்தி, வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். சிறப்பு நிருடர்.J.பீமராஜ்

திருச்சிமாநரகாவல் ஆணையராக பொறுப்பேற்றமுதல்நாளே மக்கள்குறைதீர்ப்புமுகாம் நடத்திய M.சத்தியபிரியா IPS

Image
  . திமிழக காவல்துறை இயக்குநர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்களின்  உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக திருமதி.M.சத்ய பிரியா, IPS அவர்கள்,பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த மனுக்களுக்கும், காவல் ஆணையர் அவர்களிடம் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி சிறப்பு முகாம் (பெட்டிசன் மேளா) 04.01.23-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்றது.  அதன்பேரில், திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட், கே.கே.நகர், பொன்மலை, ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சிறப்பு பெட்டிசன் மேளாவிற்கு வந்த பொதுமக்களிடமிருந்து குறைகள் தீர்க்கப்படாத 42 மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஏற்கனவே விசாரித்த 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்களை காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர்களிடம் வழங்கி, துரிதமாக விசாரணை செய்து, மனுக்களை விரைந்து முடிக்க காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  இதேபோன்று திர

கரூரில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதுடன் 2022 ல் குற்றவழக்குகள் குறைந்து செல்போன், இழந்த பணமும் மக்களுக்கு மீட்டுகொடுக்கபட்டுள்ளது SP.சுந்தரவதனம் IPS அறிவிப்பு.

Image
   02.01.2023ம் தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், IPS. அவர்கள், கரூர் மாவட்டத்தில், 2021ம் ஆண்டில் 20 கொலைகள் நடைபெற்ற நிலையில், 2022ம் ஆண்டில் 14 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கொலைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. 2021ல் 230 குற்ற வழக்குகளில் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 9 ஆயிரத்து 835 மதிப்புள்ள பொருட்கள் களவு போயின. 2022ல் 200 குற்ற வழக்குகளில் ரூ. 1 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 975 மதிப்புள்ள பொருட்கள் களவுபோன நிலையில் ரூபாய். 69 லட்சத்து 93 ஆயிரத்து 325 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் திருட்டு குற்றம் குறைக்கப்பட்டுள்ளது.     போக்சோ சட்டத்தில்  2021ல் 55 வழக்குகளும், 2022ல் 72 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2021ல் குண்டர் சட்டத்தில் 29 பேர் கைதான நிலையில், 2022ல் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா மற்றும் குட்கா வழக்குளில் மட்டும் 10 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாராய வழக்குளில் 2022ல் மட்டும் 3407 வழக்குகளில் 5912 லிட்டர் மதுபானம்;, 260 லிட்டர் சாராய ஊற