கோவை மாவட்டம்போதை பொருள் இல்லாத கிராமமாக உருவாக்குவோம் காவல்துறையுடன் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு.



சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதை பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன், IPS  அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனையின்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன்,IPS  அவர்களின் உத்தரவின் பேரில், (26.01.2023) கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக காவல்துறையுடன் இணைந்து ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 118, பஞ்சாயத்துக்கு உட்பட்ட 231 கிராமங்களில் போதை பொருள் இல்லாத கிராமங்களாக கிராமங்களில் அறிவித்து போதை பொருள் இல்லா கிராமம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

போதைப் பொருட்களுக்கு எதிராக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன், IPS அவர்களின் முன்னெடுப்பின் பேரில் கடந்த ஆண்டு (2022), 1821கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள்* மீது 1532 வழக்குகள் பதிவு செய்தும், 20141.272 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட 180 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 184 கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 9 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 391 நபர்கள் மீது நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும் நன்னடத்தை பிணையத்தை மீறிய 10 நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்த ஆண்டு (2023) இதுவரை 73 கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது 63 வழக்குகள் பதிவு செய்து 219.035 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட 05 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 68 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 22 நபர்கள் மீது நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும் நன்னடத்தை பிணையத்தை மீறிய 01 நபர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவிவரும் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தலைமையகம் மற்றும் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் போதை பொருளை ஒழிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனகோவைமாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.