புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 2022 அவிஷ்கார்லீக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு அருப்புகோட்டை பள்ளிமாணவிகள்

 .


 தேசிய அளவிலான அவிஷ்கார் லீக் 2022 போட்டியானது புது டெல்லியில்  உள்ள ப்ரூடென்ஸ் பள்ளியில் ( அசோக் விஹார் )நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு ,கேரளா ,மகாராஷ்டிரா ,டெல்லி ,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் IRC league மற்றும் Avishkaar Makeathon என 2 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. முதல் சுற்று ஆன்லைன் வழியாக நடைபெற்றது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் மட்டும் டெல்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். 




நமது தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செல்வி K. ஐஸ்வர்ய லட்சுமி, செல்வி R. மதுமிதா ஆகியோர் Avishkaar Makeathon போட்டியில் வழிகாட்டி ஆசிரியை K. இந்துமதி மற்றும் B. ராமலக்ஷ்மி ஆகியோருடன் பங்கேற்றனர். 

டெல்லியில் கடும் குளிர் வாட்டி வரும் இந்த காலத்திலும் அதை பொருட்படுத்தாது மாணவிகள் பங்கேற்றனர் . அங்கு தங்களுடைய கண்டுபிடிப்பான செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளி ஓட்டுநர்களுக்கு பயன்படக்கூடிய Confy aid என்ற படைப்பை செயல்முறை விளக்கம் காட்டினர்.. இந்த படைப்புகாக தேசிய அளவில் 2வது பரிசாக வெள்ளி பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

நம்முடைய இலக்கை அடைவதற்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை மாணவிகள் நிரூபித்துள்ளனர். வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவிகளை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் மாணிக்கவாசகம் , பொருளாளர் சங்கரவேல் , செயலாளர் ரவிசங்கர் , பள்ளி செயலாளர் மணிமாறன் , தலைமை ஆசிரியை தவமணி , ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள்  ஆகியோர் பாராட்டினார்கள்.

நிருபர்.N.ராமசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.