திருச்சிமாநரகாவல் ஆணையராக பொறுப்பேற்றமுதல்நாளே மக்கள்குறைதீர்ப்புமுகாம் நடத்திய M.சத்தியபிரியா IPS

 

. திமிழக காவல்துறை இயக்குநர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்களின்  உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக திருமதி.M.சத்ய பிரியா, IPS அவர்கள்,பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த மனுக்களுக்கும், காவல் ஆணையர் அவர்களிடம் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி சிறப்பு முகாம் (பெட்டிசன் மேளா) 04.01.23-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதன்பேரில், திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட், கே.கே.நகர், பொன்மலை, ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சிறப்பு பெட்டிசன் மேளாவிற்கு வந்த பொதுமக்களிடமிருந்து குறைகள் தீர்க்கப்படாத 42 மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஏற்கனவே விசாரித்த 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்களை காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர்களிடம் வழங்கி, துரிதமாக விசாரணை செய்து, மனுக்களை விரைந்து முடிக்க காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். 

இதேபோன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அலுவக துறைசார்ந்த மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் புகார்மனுக்கள் மீதும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியபிரியா IPS அவர்கள் தெரிவித்துள்ளார்க.

சிறப்புநிருபர்.M.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.