கோவை மாவட்டம்சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.


சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், IPS அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

 அதன் அடிப்படையில்   சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை  விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம்   பேருந்து நிலையத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரகுமார் என்பவரது மகன் பப்ளு குமார் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600  கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று கோவைமாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.