தூத்த்துக்குடி போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்போட்டி SP.Dr.L.பாலாஜிசரவணன் துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம்




தருவை மைதானத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" ("ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs”)  என்ற அடிப்படையில் விழிப்புணர்வு ”மினி மாரத்தான்” போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி  (22.01.2023)  காலை 6 மணியளவில்  தூத்த்துக்குடி போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்போட்டி SP.Dr.L.பாலாஜிசரவணன் துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம்  தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். 6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் நமது உடல் ஆரோக்கியம் தான் நமது பாதி சொத்து, எனவே நீங்கள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் இளைஞர்கள்  ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" ("ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs”) என்ற உறுதி மொழி ஏற்று போதைக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும்., சிலர் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி தொடர்ந்து உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களது உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். மேலும் இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


 இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் இம்மானுவேல், ஜெயக்குமார் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

நிருர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.