திருச்சிமாநகரில் சட்ட ஒழுங்கைபாதுகாத்து குற்றசம்பவங்களால் மக்கள் அச்சமின்றிவாழ துரிதநடவடிக்கையில் காவல் ஆணையர் .M.சத்தியப்பிரியா, IPS


 திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, IPSஅவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரணை செய்யவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். அதனால் காவல் நிலையங்களின் கோப்புகள் சரியாக பராமரிக்கப்பட்டு, குற்றங்கள் குறைந்தும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது.

திருச்சி மாநகரத்தில் உள்ள கோட்டை காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களின் புகாரின் மீது சட்டரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுத்தும் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகள் முறையாக பராமரிக்கபட்டும், வழக்குகளை விரைவாக புலன்விசாரணை செய்தும், வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்தும், வழக்குகளை விரைந்து முடிக்க தகுந்த ஆவணங்களை நீதிமன்றதிதில் சமர்ப்பித்து, வழக்குகளை விரைந்து முடிக்க உறுதுணையாக இருந்தும், காவல்நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பாராமரித்தும், காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையும் மேற்கொண்டமைகக்காக 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் மாநில அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான இரண்டாம் பரிசு கோப்பை கோட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.  

சென்னையில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து இரண்டாம் பரிசுக்கான கோப்பையை கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தயாளன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பரிசு பெற்ற கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, IPS அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.