தர்மபுரி வக்கீல் சிவகுமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம் மாவட்டSP.சரோஜ்குமார்தாக்கூர் IPS தகவல்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட SP. சரோஜ்குமார் தாக்கூர் IPS நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கிருஷ்ணகிரியில் 10 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கள்ளச்சந்தை மது விற்பனை, புகையிலை பொருட்கள் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம். 2 நாட்களில் முழு விவரம் தரப்படும். ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற தும்மனப்பள்ளி ஜெகதீஷ், ஆவலப்பள்ளி சம்பங்கிராம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல கட்டப்பஞ்சாயத்து குறித்து புகார்கள் வந்துள்ளன. அவற்றை விசாரித்து அதிலும் கைது நடவடிக்கை தொடரும். ஓசூர், கிருஷ்ணகிரியில் இதுகுறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரச்சினை, ஆட்டோ பைனான்ஸ் பிரச்சனை குறித்து மக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் கண்டிப்பாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். கடந்த 2 வாரத்தில், தனிப்படை போலீசார் சோதனையில் 1,460 கிலோ புகையிலை பொருட்கள், 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 லாரிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்.முகமதுயூனுஸ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.