கோயம்புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாவட்ட காவல்துறையினருக்கான புலனாய்வு பயிற்சி வகுப்புகள் பணியிடை பயிற்சி மையத்தில் கோயம்புத்தூர் சரக DIG. C.விஜயகுமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


கோயம்புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ,மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், மாநகரங்களை சேர்ந்த சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் அதிகாரிகளுக்கான புலனாய்வு பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர் பணியிடை பயிற்சி மையத்தில் கோயம்பத்தூர் சரக காவல் துணைத் தலைவர் DIG. திரு. C. விஜயகுமார் IPS அவர்களது அறிவுரையின்படி கடந்த 09- 01- 2023 முதல் 14-01-2023 வரை 6 நாட்கள் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. A.அறிவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.S. ராஜேஸ்வரி ஆகியோர் ஏற்பாட்டின் படி நடைபெற்றது. 

இப்பயிற்சி வகுப்பில் கோயம்புத்தூர் சரகத்தில் குற்றங்களை தடுக்கவும் குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும் நீதிமன்ற நடவடிக்கைகளில் புலனாய்வு அதிகாரிகள் திறம்பட செயல்படவும் சிறப்பான வகுப்புகள் நடத்தப்பட்டன.

 மேலும் புலனாய்வு நடைமுறைகள் சைபர் குற்றங்கள் சாலை விபத்துகளில் அதிகப்படியான மரணங்கள் பற்றிய வழக்கு புலனாய்வு(Multiple Deaths in Accident Cases),  சாதி மத கலவரங்களை கையாளும் உத்தி (Caste/ Communals Clash) அறிவியல் உத்திகளை பயன்படுத்தி கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளைகளை கண்டுபிடித்தல் குற்றவியல் சட்ட திருத்தங்கள்.

 (Latest  amendments in Criminal Laws), குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் அட்டவணை படுத்தல் (Collection of evidences in Crime against Women and Children and Documentation of evidences), குற்ற வழக்குகளில் குற்றவாளிக்கு வழங்கப்படும் விடுதலையை குறைத்து தண்டனைகளை அதிகப்படுத்தி குற்ற வழக்கை வெற்றிகரமாக நடத்துவது குறித்த (Successfully Prosecution tips for increasing the Conviction rate and Minimizing the acquittals),

பயிற்சி வகுப்புகளை காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு )கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு )காவல் ஆய்வாளர் துணை இயக்குனர் குற்ற வழக்கு தொடர்பு துறையில் இருந்து கூடுதல் அரசு வழக்குரைஞர் மற்றும் அரசு உதவி வழக்குரைஞர்கள் தடைய அறிவியல் துறை அதிகாரிகள் மற்றும் கணினி குற்றப்பிரிவினர் ஆகியோர் வகுப்புகள் நடத்த உறு துணையாக இருந்து சட்ட வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தனர்.

 கோயம்புத்தூர் சரக காவல் துணைத்தலைவர் DIG. திரு. C. விஜயகுமார் IPS அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இப்ப பயிற்சி வகுப்பில் காவல் ஆய்வாளர்கள் 4, உதவி ஆய்வாளர்கள் 12, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 21, மற்றும் தலைமை காவலர்கள் 2, என மொத்தம் 39, ஆளினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சியை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிருபர். P. நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.