கரூரில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதுடன் 2022 ல் குற்றவழக்குகள் குறைந்து செல்போன், இழந்த பணமும் மக்களுக்கு மீட்டுகொடுக்கபட்டுள்ளது SP.சுந்தரவதனம் IPS அறிவிப்பு.

 

 02.01.2023ம் தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், IPS. அவர்கள், கரூர் மாவட்டத்தில், 2021ம் ஆண்டில் 20 கொலைகள் நடைபெற்ற நிலையில், 2022ம் ஆண்டில் 14 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கொலைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. 2021ல் 230 குற்ற வழக்குகளில் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 9 ஆயிரத்து 835 மதிப்புள்ள பொருட்கள் களவு போயின. 2022ல் 200 குற்ற வழக்குகளில் ரூ. 1 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 975 மதிப்புள்ள பொருட்கள் களவுபோன நிலையில் ரூபாய். 69 லட்சத்து 93 ஆயிரத்து 325 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் திருட்டு குற்றம் குறைக்கப்பட்டுள்ளது. 


   போக்சோ சட்டத்தில்  2021ல் 55 வழக்குகளும், 2022ல் 72 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2021ல் குண்டர் சட்டத்தில் 29 பேர் கைதான நிலையில், 2022ல் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா மற்றும் குட்கா வழக்குளில் மட்டும் 10 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாராய வழக்குளில் 2022ல் மட்டும் 3407 வழக்குகளில் 5912 லிட்டர் மதுபானம்;, 260 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதில் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கள்ளச்சாராய குற்றவாளிகள்  தடுப்புக்காவலில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


கஞ்சா வழக்குகளில் 2021ல் 91.280 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 2022ல் ஆபரேஷன் கஞ்சா - 1,2,3 என தொடர் நடவடிக்கையால் 87 வழக்குகளில் 135.635 கிலோ கஞ்சா, 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதில் 2021ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்குகளில் 45 நபர்களின் வங்கி கணக்குகளும், 2022ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்குகளில் 27 நபர்களின் வங்கி கணக்குகளும், மொத்தம் 72 நபர்களின் வங்கி கணக்குகள் கடந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளன. மேலும் கஞ்சா குற்றவாளிகள் தடுப்புக்காவலில் 10 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

கரூர் மாவட்டத்தில் தொடர் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியாலும், தீவிர வாகன சோதனையின் காரணமாகவும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது கரூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. 2021ல் 393 விபத்து வழக்குகளில் 413 பேர் உயிரிழந்த நிலையில், 2022ல் 368 வழக்குகளில் 377 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 2021ம் ஆண்டை காட்டிலும் 2022ம் ஆண்டில் 36 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. விபத்துக்களில் உயிரிழப்பை குறைக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 


 கரூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு பணிக்காக காவலர் ரோந்து நவீன மயமாக்கல் முறையில் மாற்றப்பட்டு இ-பீட் நடைமுறை 108 ஆக விரிவு படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றப்பிரிவு மூலம் 2022ம் ஆண்டில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 பேரின் வங்கி கணக்குகளில் ரூ. 65,81,199ஃ- தொகை முடக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ரூபாய். 11,74,762 பணம் மற்றும் 930 செல்போன்கள் (மதிப்பு ரூபாய். 1,39,50,000ஃ-) மீட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம், IPS அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிருபர்.ஜெயபிரகாஷ். கரூர்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.