லால்குடி தகாத உறவில் குழந்தைபிறந்ததால் பெற்றதாயே குழந்தையைவிற்ற அவலம் டெல்லியில் சென்று குழந்தையைமீட்டுவந்த DSP.அஜய்தங்கம் காவல்குழுவினர்.

  

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (32). இவர் திருமணமாகாத நிலையில் தகாத உறவின் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிறந்து 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த 2022 செப்டம்பர் 23ம் தேதி விற்பனை செய்தனர்.

குழந்தையை கடத்திச் சென்றதாக நாடகமாடிய குழந்தையின் தாய் ஜானகி, அவரது வழக்கறிஞர் பிரபு, இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா ஆகிய 4 பேரை லால்குடி போலீஸார் ஜனவரி 8 ம் தேதி கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து, லால்குடி  துணை காவல்கண்காணிப்பாளர் DSP .திரு.அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயணி, விசாரணை நடத்திய நிலையில், DSP. தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஜானகியின் குழந்தை என்ன ஆனது என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சண்முகபிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜானகியின் குழந்தை புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்பதற்காக லால்குடி DSP. அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் புதுடெல்லி சென்று முகாமிட்டு குழந்தையை பற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுடெல்லியை சேர்ந்த கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் என்பவரிடம் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் வெள்ளகவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் சரகம் ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்டு கார் மூலம் திருச்சி கொண்டு வந்தனர்.

பின்னர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.சுஜித் குமார் IPS அவர்களிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த பெண் குழந்தையை திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் திருச்சிமாவட்ட SP ஒப்படைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.