Posts

Showing posts from April, 2022

தேசிய கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு விழுப்புரம் மாவட்ட SP.ஶ்ரீநாதா IPS பாராட்டு.

Image
இந்திய ஊரக விளையாட்டு துறைதேசிய கராத்தே போட்டி* 2022                   இடம்: இராசிபுரம்/ நாமக்கல் மாவட்டம். தேசிய அளவில்நடைபெற்றககராத்தேபோட்டியில்விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேசியஅளவில்  3- தங்கம், 6 - வெள்ளி, 2- வெண்கலம். பதக்கங்களை வென்று சாதனை படைத்த பூங்கோதை, சித்தார் சிவம், இளமாறன், கனகஜோதி, சுதர்சன், ஶ்ரீராம் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா அகாடமி பயிற்சியாளர்கள் திரு. சென்சாய் ரகுராமன்,செம்பாய், கனகஜோதி மற்றும் செல்வராஜ் ஆகியோரின் தலைமையில் 29-04-22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பூங்கோதை, இளமாறன் மற்றும் கனகஜோதி  உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .நிருபர்.ராமநாதன்

விழுப்புரம் மாவட்டமத்தில் காணாமல்போன 17 லட்சம் மதிப்பிலான 79 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

Image
  விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.17 லட்சம் மதிப்புள்ள 79 செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதாIPS ஒப்படைத்தார்.  விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல்போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.   அவற்றில் ரூ.17 லட்சம் மதி்ப்புள்ள 79 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.   அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி 29-04-22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS அவர்கள் கலந்துகொண்டு, உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.  மேலும், செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம்பிரிவு காவல் உதவிஆய்வாளர் திரு.வீரமணி,தனிபடை உதவிஆய்வாளர்கள் தமிழ்மணி ,கார்த்திக் சைபர்கிரைம்பிரிவு காவலர்கள் இளங்கோவன், செல்வி ஆகியகாவல்குழுவினரை SP.ஶ்ரீநாதா IPS அவர்கள்வெகுவாகப் பாராட்டினார். நிருபர்.ராமநாதன்

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது...6.800 கிலோ கஞ்சா பறிமுதல்... காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மாவட்ட SP.பத்ரிநாராயணன் IPS பாராட்டு

Image
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில்  (28.04.2022)மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்.                                                                                                                                                                                                                                     பொள்ளாச்சி  மேற்கு காவல்       நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி. அனந்தநாயகி அவர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெஷன்ட் நாத் என்பவரது மகன் பிரசாந்குமார் நாத்(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்கந்தே கவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான திருமலையம்பாளையம் பகுதியில் காவல்உதவி ஆய்வாளர்    திரு. சரவணன்அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த  மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர

தூத்துக்குடிமாவட்ட புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பாக ‘மாற்றத்தை தேடி” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
 தூத்துக்குடிமாவட்ட புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பாக ‘மாற்றத்தை தேடி”  என்ற  தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் (28.04.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்,  சமுதாயத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் சாதனையாளர்கள் பலர் சிறு கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடையை திறமையே அவர்களை சாதனையாளர்களாக மாற்றியது. நீங்களும் உங்கள் திறமையை வளர்த்துகொண்டு சிறந்த சாதனையாளர்களாக இந்த சமுதாயத்தில் வளர வேண்டும். மேலும் பெண்கள் சமூக வலைதளத்தில் தேவையில்லாமல் தங

பொன்னமராவதி காவல் சரகம்.ஏனாதி கிராமத்தில் வீடுகட்டுமானபணி செப்டிடேங்க் குழிதோண்டியபோதுகிடைத்த புதையல்குடுவை.

Image
பொன்னமராவதி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஏனாதி கிராமத்தில்  26.04.22 ஆம் தேதி 11.00 மணி அளவில் ஜெயலட்சுமி Wo, நாகராஜன்,(SC/PL) என்பவர் வீட்டிற்கு முன்பு செப்டிக் டேங்க் குழி தோண்டும்போது சிறிய மண் குடுவை  மூடிய நிலையில் இருந்ததைப் பார்த்து சந்தேகப்பட்டு வேலை பார்த்தவர்கள் உரிமையாளர் ஜெயலட்சுமி இடம் கூறியுள்ளனர் அவர் மண் குடுவையை உடைத்து பார்த்தபோது உள்ளே 16 தங்க காசுகள் இருந்துள்ளது.தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு VAo ஆரோக்கியராஜ் அவர்களுடன் சென்று பொருளை மீட்டு தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டு 15.00 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் திருமதி ஜெயபாரதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் மேலச்சிவபுரி கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய ராஜ் மற்றும் வட்ட ஆய்வாளர் திருமதி. திலகா ஆகியோர் தங்க காசுகளை பொன்னமராவதி ஸ்டேட் பேங்க் நகை மதிப்பீட்டாளர் முன்னிலையில் நகை எடை போடப் பட்டது. உடன் உதவி ஆய்வாளர் திரு.ரகுராமன்,SSI திரு, ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர். மொத்த எடை 62.500grஅதன் மதிப்பு₹2,50,000/-பின்பு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப் பட்டது. மேற்கண்ட புதையல் தங்க நாணயத்தை பொன்னமராவதி க

கோவை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை கண்டுபிடித்த காவலரின் திறன்மிகு செயலை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் IPS அவர்கள்

Image
கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  12  வயது   சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த (13.04.2022)ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். இப்புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட  மு.நி.காவலர் திரு. கோட்டை சேகர்(GrI 1186) என்பவரின் திறன்மிகு செயலை   பாராட்டும் விதமாக,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் (26.04.2022) மாவட்டக் காவல் அலுவலகத்தில்நேரில்அழைத்து  பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. நிருபர்.P.நடராஜ்

திருநெல்வேலி மாவட்டம்,பணியின்போது தக்கபட்டு காயமமடைந்து சிகிச்சைபெற்றுவரும் உதவிஆய்வாளரை நேரில் சந்தித்து DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS ஆறுதல் கூறினார்

Image
  .திருநெல்வேலிமாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் செல்வி.C.மார்க்ரெட் தெரசா, சுத்தமல்லி காவல் நிலைய சரகம் பழவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் 23.04.2022 அதிகாலை 00.45 மணியளவில் பெண் மு.நி.க. 3044 திருமதி.லெட்சுமி, காவலர் 3684 திரு.ரமேஷ், ஆயுதபடை காவலர் 1012 திரு. மணிகண்டன் ஆகிய காவலர்களுடன் பாதுகாப்பு அலுவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 27.03.2022 அன்று மேற்படி உதவி ஆய்வாளர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் மீது போது மேற்படி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் குடிபோதையில் வாகவும் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ரூ.10,000/- அபராதம் செலுத்தியதை மனதில் வைத்துக் கொண்டு மேற்படி உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு திடீரென அவர் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் உதவி ஆய்வாளரின் இடது கன்னம், கழுத்து பகுதியில் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக மேற்படி உதவி ஆய்வாளரை உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில்

27ஆண்டுளுக்கு முன் போலி ஆவணம் மூலம் ஏமாற்றிய ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 2½ சென்ட் நிலத்தை, 3 மாத காலத்திற்குள் மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்திருநெல்வேலி மாவட்ட SP.P.சரவணன் IPS பாராட்டு.

Image
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், ஜோதிபுரத்தை சேர்ந்த மரியபரிபூரணம் (60) என்பவருக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட  2½ சென்ட் இடம் ஜோதிபுரத்தில்  உள்ளது. மரியபரிபூரணம் என்பவருக்கு கணவர்  மற்றும் குழந்தைகள்  இல்லாத நிலையில் தனியாக இருந்து  கூலி வேலை செய்து வருகிறார். மேற்படி   இலவசபட்டா இடத்தை  போலி ஆவணம் மூலம்‌  வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து  மரியபரிபூரணம் 27 ஆண்டுகளாக நிலத்தை மீட்க போராடி வந்துள்ளார். இந்நிலையில்  மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்  மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  ஆய்வாளர்  திருமதி.சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், தலைமைக் காவலர் திரு.நாகராஜன்,‌ ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மரிய பரிபூரணத்திற்கு சொந்தமான ரூபாய் 10 லட்சம் மதிப்ப

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 வருடங்கள் சிறப்பாக பணி நிறைவு செய்த காவல்துறையினரின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள்வழங்கி பாராட்டு

Image
 தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 வருடங்கள் சிறப்பாக பணி நிறைவு செய்த காவல்துறையினரின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்  விருந்தினராக கலந்துகொண்டு நினைவுபரிசுகள் வழங்கி காவல்துறையினரை பாராட்டினார்.           தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 81 பேர் பதவி உயர்வுகள் பெற்று தற்போது தலைமைக்காவலர்களாக சிறப்பான முறையில் பணியாற்றி இன்றுடன் (26.03.2022) 25 வருடங்கள் நிறைவு செய்துள்ளனர். மேற்படி தலைமைக் காவலர்கள் 25 வருடங்கள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி நிறைவு செய்ததை நினைவுகூறும் வகையில் இன்று (26.03.2022) வெள்ளிவிழா நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்                                     டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நினைவு பரிசுகள்

திருவண்ணாமலைமாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆங்குணம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டுக்கு அரசு பட்டாவழங்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Image
 திருவண்ணாமலைமாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆங்குணம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீட்டுக்கு அரசு பட்டா வழங்கப்படவில்லை 70 ஆண்டுக்கு மேலாக சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தரவில்லை மற்றும் பல்வேறு அடிப்படை தேவைகள் சரி செய்து கொடுக்கப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து......25/04/2022 இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என்று.... அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பாகவும்..... மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பாகவும் ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்  சிறப்புநிருபர்.R.சக்திவேல்.

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு வெள்ளி பொருட்கள் திருட்டு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை

Image
  தூத்துக்குடி மாவட்டம்  தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு வெள்ளி பொருட்கள் திருட்டு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை  - புகார் அளித்த 4 மணி நேரத்தில்  இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது - ரூபாய் 1, 88,500/- மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு - கைது செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி பிரையண்ட் நகர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முருகன் (60) என்பவர், தூத்துக்குடி சிதம்பரம்நகர் அம்மன் கோவில் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடை வைத்துள்ளார். மேற்படி நகை கடையில்  (17.04.2022) இரவு கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூபாய் 1,88,500/- மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா

DRIVE AGAINST DRUGS - 2.O. 1005 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்.... பதுக்கி வைத்திருந்தவர் கைதுகோவை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கை".

Image
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு IPS அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர்,IPS அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  டாக்டர்.முத்துசாமி,IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் மேற்பார்வையில்  (21.04.2022) கோவை மாவட்டம்    செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  செட்டிபாளையம் காவல் நிலைய உதவிஆய்வாளர் திரு. சின்னகாமணன், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜேந்திர பிரசாத் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும்  தனிப்படை குழுவினருடன் சம்பவ இடமான பெரிய குயிலி, வண்ணாங்காடு தோட்டம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்த கோவை மாவட்டம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மங்காராம் என்பவரது மகன் ரமேஷ்குமார் (2

காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல், ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.

Image
                                                                                                                                                              23.04.2022  திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக செல்வி.மார்க்ரெட் தெரேசா அவர்கள் பணியாற்றி வருகிறார். 23.04.2022-ம் தேதி  சுத்தமல்லி காவல் சரகத்திற்குட்பட்ட பழவூர் பகுதியில் நடைபெற்ற  கோவில் திருவிழாவில் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். 27.03.2022 -ம் தேதி மேற்படி  உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது, பழவூர், பால்பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம்(40), மற்றும் அவரது நண்பர் இருசக்கர வாகனத்தில் வரும்போது,  மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும்போது மேற்படி நபர்கள் இருவரும் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அதனால் மேற்படி நபர்க்கு ரூபாய் 10000 அபராதம் விதித்துள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு ஆறுமுகம் 23.04.2022ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தனது கையிலிருந்த பிளேடால் தாக்கி கொலை

கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநில சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 இளைஞர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Image
  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளா,ஆலப்புழா மாநிலத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில்  சுற்றுலா வந்துள்ளனர்,மேலும் இந்த இளைஞர்கள் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை (பல்சர் 220) சாலையின் ஓரத்தில்  நிறுத்தி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர்,மறு நாள்(29.03.2022) காலையில்  சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை வந்து பார்க்கும் போது மாயமாக இருந்துள்ளது இதனையடுத்து கேரளா சுற்றுலா பயணிகள்  கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ,புகார் அடிப்படையில் உதவிஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வந்தனர்,இதனையடுத்து  ஆனந்தகிரி 4வது தெரு பகுதியில் நேற்று காவல் துறையினர் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர்,அப்போது அப்பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டம் மிட்டு இருந்த இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர் அப்போது முன்னுக்கு

கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த செங்கோட்டை காவல்துறையினருக்கு காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பாராட்டு.

Image
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கலங்காதகண்டி பகுதியை‌  சேர்ந்த கனகராஜ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த துரை மற்றும் அவரது தந்தை ராஜ் இருவரும் கொலை செய்தனர். இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கப் பெறச் செய்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ஷியாம் சுந்தர் அவர்கள் மற்றும்  நீதிமன்ற காவலர் திரு.முருகன் ஆகியோருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிவேஷ்குமார் IPS அவர்கள் தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.நிருபர்.அண்ணாமலை

Tamilnadu Hindu temples federation 🚩 திருவெற்றியூர் ஸ்ரீ வெட்டுடையாள் காளியம்மன் கோவில் முப்பத்தி ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழா கலைமாமணி திருமதி லதா அவர்கள் விழாவினை துவக்கி வைத்தார்

Image
 16/04/2022ஸ்ரீ வெட்டுடையாள் காளியம்மன்  திருக்கோயில் திருவற்றியூர் முப்பத்தி ஆறாம் 36 ஆண்டு தீமிதி திருவிழா  முன்னிட்டு தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் திருவிழாவை  கலைமாமணி லதா சபாபதி கௌரவத் தலைவர் - TNHTF , திருமதி கௌரி அசோகன் வழக்கறிஞர் கௌரவ ஆலோசகர் TNHTF, திரு.சுப்பிரமணி மாநில முதன்மை செயலாளர் TNHTF  முன்னிலையில் முளைப்பாரி எடுக்கும் 150 பெண் பக்தர்களுக்கு  புடவையும் சிறப்பு அன்னதானமும் அபிஷேகமும் நடைபெற்றது திருவேற்காடு பகுதி திருக்கோயில் கூட்டமைப்பு தலைவர்களும் செயலாளர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்  கொள்கிறோம்  மணிகண்டன் முருகதாஸ்  மாநில அமைப்பாளர் தமிழ்நாடு இந்து  திருக்கோயில்கள் கூட்டமைப்பு.

கோவை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Image
  16 4 22 அன்று கோயம்புத்தூர் காவல் நரகத்திற்கு உட்பட்ட கோவை ஈரோடு நீலகிரி திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோவை திருப்பூர் மாநகரங்கள் சார்ந்த காவல் உதவி ஆய்வாளர் களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி குமரகுரு தொழில் நுட்ப கல்லூரியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்(IG) திரு. R. சுதாகர் IPS அவர்களது தலைமையில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) முனைவர் திரு. M.S.முத்துசாமி IPS அவர்களின் முன்னிலையில் .SQR LDR   திரு. உன்னி நாயர் அவர்களால் நடத்தப்பட்டது இப் பயிலரங்கத்தில் கோவை ரகத்தை சார்ந்த 50 காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்Reporter.P.Nataraj.

சென்னையில் பேருந்துகளில் விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் செல்லும் கொள்ளையர்கள் கைதுதுணைஆணையர் கார்த்திகேயன்IPS தலைமையில் வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் காவல் குழுவினர் அதிரடி

Image
                                            துணை ஆணையர்      திரு. கார்த்திகேயன்IPS                                         உதவி ஆணையர் திரு.ஹரிகுமார்,                                                  காவல்ஆய்வாளர்.கண்ணன   சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் தெற்குமண்டல கூடுதல் ஆணையர் திரு. கண்ணன் IPS அவர்கள் மேற்பார்வையிலும் காவல் இணை ஆணையர் கிழக்கு மண்டல திரு. பிரபாகரன் IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. கார்த்திகேயன்IPS அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வேப்பேரி காவல் உதவி ஆணையர் திரு.ஹரிகுமார்,காவல்ஆய்வாளர்.கண்ணன் காவல் குழுவினர் இணைந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை காவல் குழுவினர் தேடிவந்த நிலையில் ஒவ்வொரு செல்போனின் .       I E M I .வைத்து GPS கருவிகள் மூலம் செல்போன்கள் இருக்கும் இடத்தை கண்டறியப்பட்டு உமாபதி என்பவனை பிடித்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் செல்போன் இருட்டில் ஈடுபட்ட தாக ஒப்புக்கொண்டனர்                                 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்காபுகையிலைபொருட்கள் ககடத்தியவர்கள் வாகனத்துடன்கைது.

Image
விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருட்கள் சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு வந்த TN 05 AY 2490 என்ற Tata காரில்  அரசால் தடை செய்யப்பட்ட 218 கிலோ புகையிலை பொருட்கள் 18 சாக்குப் பைகளில் இருப்பது தெரியவந்ததுஎதிரி சங்கர் வயது 36 த/பெ  காசிநாதன் அனந்தபுரம்என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.2,18,000 மதிப்புள்ள 218 கிலோ புகையிலை  மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரியின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது.விழுப்புரமாவட்டகாவல்கண்காணிப்பாளர் ஶ்ரீநாதாIPS அவர்கள்நநேரில்வந்து பார்வையிட்டு காவல்குழுவினருக்குபாராட்டுதெரிவித்தார். நிருபர்.ராமநாதன்.

கோவைமாவட்டம்ஆனைமலை பகுதியில் திருட முயன்றவர்களை துரிதமான முறையில் செயல்பட்டு கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS

Image
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 09.04.2022 அன்று இரவு பூட்டியிருந்த வீட்டில் சத்தம்‌ வந்ததால் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து அவ்வீட்டின் அருகே சென்று பார்த்தபோது, அவ்வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே திருட முயன்ற பொள்ளாச்சி ராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (31) மற்றும் சலிம் (19)ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் துரிதமான முறையில் செயல்பட்டு கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலர்கள் HC 1853 திரு.சத்துருகன்,HC 714 திரு. கர்ணன் மற்றும் மு.நி.காவலர் 416 திரு.கிருஷ்ண சந்தர் ஆகியோர்களைநேரில்அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள்  (11.04.2022)மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.நிருபர்.P.நடராஜன்.

நகை கடை உரிமையாளரை ஆயுதத்தால் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 5 பேர் கைது.தனிப்படைகாவல்குழுவினருக்கு மாவட்ட SP.P.சரவணன்IPS பாராட்டு.

Image
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வீரவநல்லூர்‌ மெயின் பஜாரில்  மைதீன் பிச்சை(60), என்பவர்  அலி ஜூவல்லர்ஸ்  என்னும் பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் 11.04.2022-ம் தேதி  அன்று  இரவு கடையை அடைத்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது புதுமனை தெரு அருகே  இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மைதீன் பிச்சையை வழிமறித்து அரிவாள் மற்றும்  இரும்புக் கம்பியால் தாக்கி இருசக்கர வாகனத்தில் தொங்க விட்டிருந்த சுமார் 4½ கிலோ தங்க நகை மற்றும் பணத்துடன் கூடிய பையை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசாரால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. மேற்படி சம்பவம் நடந்த இடத்தினை  திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்         திரு.பிரவேஷ் குமார் IPS அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் அவர்கள் மேற்பார்வையில் சேரன்மகாதேவி  உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  திரு.ராமகிருஷ்ணன், அ