விழுப்புரம் மாவட்டமத்தில் காணாமல்போன 17 லட்சம் மதிப்பிலான 79 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

 


விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.17 லட்சம் மதிப்புள்ள 79 செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதாIPS ஒப்படைத்தார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல்போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 அவற்றில் ரூ.17 லட்சம் மதி்ப்புள்ள 79 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. 

 அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி 29-04-22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.


 நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS அவர்கள் கலந்துகொண்டு, உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.


 மேலும், செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம்பிரிவு காவல் உதவிஆய்வாளர் திரு.வீரமணி,தனிபடை உதவிஆய்வாளர்கள் தமிழ்மணி ,கார்த்திக் சைபர்கிரைம்பிரிவு காவலர்கள் இளங்கோவன், செல்வி ஆகியகாவல்குழுவினரை SP.ஶ்ரீநாதா IPS அவர்கள்வெகுவாகப் பாராட்டினார்.

நிருபர்.ராமநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.