திருநெல்வேலி மாவட்டம்,பணியின்போது தக்கபட்டு காயமமடைந்து சிகிச்சைபெற்றுவரும் உதவிஆய்வாளரை நேரில் சந்தித்து DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS ஆறுதல் கூறினார்




  .திருநெல்வேலிமாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் செல்வி.C.மார்க்ரெட் தெரசா, சுத்தமல்லி காவல் நிலைய சரகம் பழவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் 23.04.2022 அதிகாலை 00.45 மணியளவில் பெண் மு.நி.க. 3044 திருமதி.லெட்சுமி, காவலர் 3684 திரு.ரமேஷ், ஆயுதபடை காவலர் 1012 திரு. மணிகண்டன் ஆகிய காவலர்களுடன் பாதுகாப்பு அலுவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 27.03.2022 அன்று மேற்படி உதவி ஆய்வாளர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் மீது போது மேற்படி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் குடிபோதையில் வாகவும் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ரூ.10,000/- அபராதம் செலுத்தியதை மனதில் வைத்துக் கொண்டு மேற்படி உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு திடீரென அவர் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் உதவி ஆய்வாளரின் இடது கன்னம், கழுத்து பகுதியில் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக மேற்படி உதவி ஆய்வாளரை உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்ததுடன் எதிரியையும் கைது செய்தனர். பின்பு உதவி ஆய்வாளர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் மேற்படி ஆறுமுகம் மீது சுத்தமல்லி காவல் நிலைய குற்ற எண். 97/2022 u/s 294(b), 353,307 506(11) IPC ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டு. மேற்படி எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.


இதையறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொலைபேசி வாயிலாக உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததுடன், உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.* உதவி ஆய்வாளர் தற்போது உயர்தர மருத்துவ மருத்துவமனையில் (Tirunelveli Multi Speciality Hospital) அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். உடல்நிலை சீராக உள்ளது. மேலும் காயம்பட்ட உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்தார். அறிவிக்கப்பட்ட தொகையை இன்று மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் மேற்படி உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் காயம்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் ஆறுதலும் கூறினார். சம்பவத்தின் போது உடனிருந்து காப்பாற்றி உடனடியாக சிகிச்சையளிக்க உதவிய காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்

 சிறப்புநிருபர்.அந்தோணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.