கோவைமாவட்டம்ஆனைமலை பகுதியில் திருட முயன்றவர்களை துரிதமான முறையில் செயல்பட்டு கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS


கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 09.04.2022 அன்று இரவு பூட்டியிருந்த வீட்டில் சத்தம்‌ வந்ததால் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து அவ்வீட்டின் அருகே சென்று பார்த்தபோது, அவ்வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே திருட முயன்ற பொள்ளாச்சி ராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (31) மற்றும் சலிம் (19)ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் துரிதமான முறையில் செயல்பட்டு கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலர்கள் HC 1853 திரு.சத்துருகன்,HC 714 திரு. கர்ணன் மற்றும் மு.நி.காவலர் 416 திரு.கிருஷ்ண சந்தர் ஆகியோர்களைநேரில்அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள்  (11.04.2022)மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.நிருபர்.P.நடராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.