நகை கடை உரிமையாளரை ஆயுதத்தால் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 5 பேர் கைது.தனிப்படைகாவல்குழுவினருக்கு மாவட்ட SP.P.சரவணன்IPS பாராட்டு.


திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வீரவநல்லூர்‌ மெயின் பஜாரில்  மைதீன் பிச்சை(60), என்பவர்  அலி ஜூவல்லர்ஸ்  என்னும் பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் 11.04.2022-ம் தேதி  அன்று  இரவு கடையை அடைத்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது புதுமனை தெரு அருகே  இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மைதீன் பிச்சையை வழிமறித்து அரிவாள் மற்றும்  இரும்புக் கம்பியால் தாக்கி இருசக்கர வாகனத்தில் தொங்க விட்டிருந்த சுமார் 4½ கிலோ தங்க நகை மற்றும் பணத்துடன் கூடிய பையை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசாரால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. மேற்படி சம்பவம் நடந்த இடத்தினை  திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்         திரு.பிரவேஷ் குமார் IPS அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் அவர்கள் மேற்பார்வையில் சேரன்மகாதேவி  உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  திரு.ராமகிருஷ்ணன், அவர்கள், மற்றும் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் தலைமையில்   6 தனிப்படைகள் அமைத்து கோள்ளையர்களை விரைந்து கைது செய்ய  உத்தரவிட்டார். 

இதன்படி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரிகேசவநல்லூரை சேர்ந்த  சுதாகர்(18) மன்னார் கோவிலைச் சேர்ந்த மருதுபாண்டி(20) காக்கநல்லுரை சேர்ந்த ஐயப்பன்(24) மற்றும் 2 இளஞ்சசிறார்கள் உட்பட 5 நபர்களை  கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வழிப்பறியில் ஈடுபட்ட  கொள்ளையர்களை விரைந்து கைது செய்த வீரவநல்லூர் காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் தனிப்படை  காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS அவர்கள்  வெகுவாக பாராட்டினார்.தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.