காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல், ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.




                                                                                                                                                              23.04.2022  திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக செல்வி.மார்க்ரெட் தெரேசா அவர்கள் பணியாற்றி வருகிறார். 23.04.2022-ம் தேதி  சுத்தமல்லி காவல் சரகத்திற்குட்பட்ட பழவூர் பகுதியில் நடைபெற்ற  கோவில் திருவிழாவில் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். 27.03.2022 -ம் தேதி மேற்படி  உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது, பழவூர், பால்பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம்(40), மற்றும் அவரது நண்பர் இருசக்கர வாகனத்தில் வரும்போது,  மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும்போது மேற்படி நபர்கள் இருவரும் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அதனால் மேற்படி நபர்க்கு ரூபாய் 10000 அபராதம் விதித்துள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு ஆறுமுகம் 23.04.2022ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தனது கையிலிருந்த பிளேடால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின் காவலர்கள் மற்றும்  கொடைவிழாவிற்கு வந்தவர்கள் சத்தம் போடவும் ஆறுமுகம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

 மேற்படி சம்பவம் சம்மந்தமாக  சுத்தமல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  காவல் ஆய்வாளர் திரு.ஜீன்குமார், அவர்கள் விசாரணை மேற்கொண்டு அரசுபணியினை செய்ய விடாமல் தடுத்து ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆறுமுகத்தை  கைது செய்தார்.காயத்துடன் மருத்துவனையில் சிகிச்சைபெற்றுவரும் உதவிஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசாஅவர்ககளை DIG.பிரவேஷ்குமார் IPS,மாவட்ட SP.சரவணன் IPS,மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று பார்த்து சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

ChiefReporter.Shanmuganathan.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.