Posts

Showing posts from December, 2022

திருச்சி மாநகரில் காவல்துறை ஆபரேஷன் மறுவாழ்வு திட்டத்தின்படி சாலைஓரம் ஆதரவற்றநிலையில் உள்ள முதியோர்கள்,குழந்தைகள் பிச்சைகாரர்களை மீட்டு காப்பகத்தில்ஓப்படைத்த ஆய்வாளர் அஜிம்

Image
 2022 டிசம்பர் முதல் வாரத்தில் தமிழககாவல்துறை DGP.Dr.C. சைலேந்திரபாபுIPS அவர்கள்உத்தரவின்படி ஆபரேஷன் புதுவாழ்வு என்னும் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர காவல்ஆணையர்.திரு. கார்த்திகேயன்IPS அவர்கள் மேற்பார்வையில் திருச்சி மாநகரில் தனிப்படை அமைத்து  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.அஜிம் அவர்களின் தலைமையில்காவல்குழுவினர் திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் ரயில் நிலையம், ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் இன்னும் பல பொது இடங்களில் ஆதரவற்று பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 80க்கும் அதிகமான ஆதரவற்ற நபர்களை மீட்டு கங்காரு காப்பகத்திலும், குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்த்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது இத்தகைய சிறப்பான செயலை காவல்துறை உயரதிகாரிகளும் தமிழக அரசும் பாராட்டி கவுரவித்தனர் . தலைமை நிருபர். ராக்கேஷ் சுப்பிரமணியன்

ஒரு மாதத்திற்குள் 32 சென்ட் நிலத்தை மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.SP.பாராட்டு

Image
   திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த  சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில்  32 சென்ட்  நிலம் உள்ளது.  மேற்படி நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேற்படி  நிலத்தினை மீட்டுத்தருமாறு சுப்பையா அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம்  மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  ஆய்வாளர்  திருமதி. மீராள்பானு அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. தனலெட்சுமி அவர்கள் தலைமையிலான  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு  நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS, அவர்கள் நில உரிமையாளர் சுப்பையாவிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு  32 சென்ட்  நிலத்தினை மனு அளித்து ஒரு மாதத்

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!ராஜேந்திரன் மணி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Image
சென்னையைச் சேர்ந்த பாடி பில்டரான ராஜேந்திரன் மணி(50) என்பவர் தாய்லாந்தில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சென்னை:கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர், ராஜேந்தின் மணி(50). இவரது தந்தை குத்துச்சண்டை வீரராக இருந்த நிலையில் தானும் 14 வயது முதல் உடற்பயிற்சி மேற்கொண்டு, உடலைக் கட்டுக் கோப்பாக்கி பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்றார். அதே வேளையில் விமானப்படையில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றிவரும்போது பல்வேறு 'பாடி பில்டர்' போட்டிகளில் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து திருமணதிற்குப் பிறகும் பாடி பில்டிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார், ராஜேந்திரன் மணி. அவர் மனைவி கொடுத்த ஊக்கத்தால் தேசிய அளவில் 14 முறை இந்திய ஆணழகன் பட்டமும், ஆசிய அளவில் 3 முறை ஆணழகன் பட்டமும் வென்றார். மேலும், உலக அளவில் 2013ஆம் ஆண்டு முதல்முறையாக ஆணழகன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி, அதன்பிறகு உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஐந்து முறை ஆணழகன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 44 நாடுகளில் இருந்து பங்

இராமநாதபுரம் காவல்துறை சார்பாக மக்கள்குறைதீர்ப்புமுகாம் புகார்மீது உடனடிநடவடிக்கை மக்கள்பாராட்டு.

Image
 இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (21.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள், புகாரின் தன்மைக்கேற்ப உடனடி நடவடிக்கைக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  புகாரினை அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், வாரம்தோறும் புதன்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் மக்கள் தங்கள்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகாணலாம் என்று SP.தங்கதுரை தெரிவித்துள்ளார். நிருபர்.சிவகுருநாதன்.

விருதுநகர் சாத்தூர் இருசக்கரவாகனத்தில் சென்ற பள்ளிஆசிரியையிடம் செயினைபறித்துசென்ற வழிபறி கொள்ளையர்கள்விரட்டிபிடித்து கைது காவல்துறையினர் அதிரடி.

Image
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உட்கோட்டம் சாத்தூர் நகர் காவல் நிலையம் படந்தால் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த  இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயினை பறித்து தப்பி சென்றனர்.  மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டதில் சாத்தூர் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் 2643 திரு. சதீஷ்குமார் அவர்கள் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினார். இந்த நிகழ்வை அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., அவர்கள், முதல் நிலை காவலர் திரு.சதீஷ்குமாரின் பணியினை பாராட்டி பண வெகுமதி வழங்கி கௌரவித்தார். நிருபர்.M.ஆனந்தகுமார்.

திருநெல்வேலிமாநகரில் மக்கள்பாதுகாப்பு கருத்தில்கொண்டுகா வல்து றைசார்பாகவாரம்தோறும் குறைதீர்ப்பு சந்திப்புகூட்டம் நடத்திவரும் காவல்ஆணையர் அவினாஷ் IPS.

Image
   திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் வசிக்கும் பொதுமக் கள் தங்கள் குறைகள் புகார்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அவர்களை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து வருவதோடு, 21-12-2022 ம் தேதியன்று, வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே மனு அளித்தவர்களின் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலோ அல்லது காவல்துறையினர் எந்த நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றாலோ, தீர்வு கிடைக்கவில்லை என்றாலோ புதன்கிழமைகளில் நேரில் வந்து மீண்டும் மனு அளிக்கலாம். என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.அவிநாஷ் குமார் IPSஅவர்கள் தெரிவித்துள்ளார்.  இது தவிர அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும்.தெரிவித்துள்ளார்கள். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

கொடைக்கானல் அக்கரைக்காடு ,கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு,விற்ப‌னை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது,காவல்துறைணயினர் அதிரடி.

Image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து உள்ளதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வ‌ந்த‌து, இந்நிலையில்  கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர்ன் ஊராட்சிக்கு உட்பட அக்கரைக்காடு கிராமத்தில் வசிப்பவர் மகேந்திரன்(37) இவர் தனது மனைவி மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார், இத‌னை தொட‌ர்ந்து இவர் கஞ்சா பயிரிட்டு   அத‌னை விற்பனை செய்வ‌த‌ற்காக‌ கஞ்சா செடிகளை வீட்டின் அருகே காய வைத்ததாக கூறப்படுகிறது, இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கொடைக்கானல்  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த‌ன‌ர், தகவல் அடிப்படையில் அக்கரைக்காடு கிராமத்திற்கு சென்ற காவல் துறையினர் மகேந்திரன் வீட்டில் சோதனை செய்த போது கஞ்சா பாக்கெட்டுக்கள் மற்றும் காயவைத்திருந்த கஞ்சா இருந்தது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி பெனாசிர்(32),மகேந்திரன் தந்தை ராஜா(70) உள்ளிட்ட மூவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் மகேந்திரன் கஞ்சா புகைப்பதை  வழக்கமாக வைத்துள்ளார், மேலும் கஞ்சாவிற்காக பல கிலோமீட்டர் நடந்து சென்று அலைந்து வாங்கி

நீலகிரி மாவட்டம் குன்னூர் இருளர்சமுதாய மாணவர்களுக்கு மேம்பாட்டுமையம் அமைத்துகொடுத்த காவல்துறையினர்

Image
.நீலகிரி மாவட்டம் குன்னூர் உடகோட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பகுதியில் அதிகம் இருளர் வகுப்பை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.  அவர்கள் பயன்பெறும் வகையில் காவல்துறை சார்பாக பழங்குடியினர் மேம்பாட்டு மையம் கட்டமைக்கப்பட்டு அதில் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் நோட்டுபுத்தகங்கள். ஒளிபடக்காட்டி (Projector). நகல் எந்திரம் (Xerox machine) மற்றும் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் வகையில் உடற்பயிற்சி சாதனங்கள் ஆகியவை வைத்து அதற்கென மூன்று அலுவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதனை  கரிக்கையூர் பழங்குடியினர் மேம்பாட்டு மையத்தை திருமதி. மோனிகா ராணா, IAS. திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் அவர்களால் திறந்து வைத்து பழங்குடியினர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீ ஹரிகோட்டா விண்கள் ஏவுதளத்தை பார்வையிட கரிக்கையூர் அரசு பள்ளியில் இருந்து தேர்வான பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜு மற்றும் ரேவதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது மற்றும் பள்ளியில் படிக்கும். மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக நோட

திண்டுக்கல் மாவட்டத்தில் இணைய வழியில் 3 நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,24,000/- பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தசைபர்க்ரைம் காவல்துறையினர்.DIG.பாராட்டு.

Image
திண்டுக்கல்மாவட்டம் பழனியைச் சேர்ந்த துரையரசு (20) என்பவருக்கு ஆன்லைன் மூலம் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.85,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த விக்னேஷ்வர் (19) என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.14,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.25,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் மனுதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில்  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுபடி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மூன்று நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,24,000/- பணத்தை மீட்டு   திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG. திரு.ரூபேஷ் குமார் மீனா. IPS அவர்கள் மனுதாரர்களிடம் ரூ.1,24,000/- பணத்தை ஒப்படைத்தார்கள். நிருபர்.P.சதீஷ்.

தூத்துக்குடிமாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்க SP.Dr.L.பாலாஜிசரவணன் தீவிரநடவடிக்கை

Image
 தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில்  ரோந்தை தொடர்ந்து  நேரடியாக தீவிர ரோந்து. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  (14.12.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து சிறப்பு ரோந்து மேற்கொண்டார். அதனைதொடர்ந்து  (15.12.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங்போர்டு உட்பட பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு க

சேலம்மாநகரகாவல்துறைசார்பாக பொதுமக்கள் மற்றும் ஆட்டோஓட்டுனர்களுக்கு போதைபொருள் தீமைகுறித்து விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி

Image
 . 14.12.2022-ஆம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்களின் தலைமையில் பள்ளப்பட்டி காவல் நிலைய சரகத்தில், P.V.மஹாலில்,பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான "போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், தலைமையகம் DC. திரு.S.ராதாகிருஷ்ணன் அவர்களும், தெற்கு DC         திருமதி.S.P. லாவண்யா அவர்களும், வடக்கு DC. திரு.M.மாடசாமி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  இக்கருத்தரங்கில் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்! உயிரை காப்போம், குடும்பத்தை நேசிப்போம்!! என்ற உறுதி மொழியை மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா IPS அவர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.

கோவை மாவட்டம்ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக "காவல்துறையினருடன் ஒரு நாள்" நிகழ்வு... பள்ளி மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு நெகிழ்ச்சி.

Image
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அனைத்து பள்ளி குழந்தைகளையும்  விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக  வடிவமைத்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் "காவல்துறையினருடன் ஒரு நாள்"(A DAY WITH POLICE) என்ற நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர்,IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  Dr.M.S. முத்துசாமி,IPS அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,IPS அவர்களும் கலந்துகொண்டு கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 31 மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் PRS வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து,13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளை மீட்ட சூலூர் காவல்துறையினர் SP.பாராட்டு.

Image
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள்  உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்த ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள CCTV கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் (09.12.2022) சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட  முபாரக் அலி(29), ஜெகநாதன்(27) மற்றும் சரவணன்(24) என்பதும் தெரியவந்தது. எனவே  அந்தபர்களை கைது செய்து, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13,00,000/-லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ‌1,60,000/-ரொக்க பணத்

தருமபுரி லாரியில்கடத்தப்பட்டரூ.10.லட்சம் மதிப்பிலான அரசால்தடைசெய்யபட்ட குட்காபறிமுதல் காவல்துறையினர் அதிரடி.

Image
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கடராமன் உதவி ஆய்வாளர் திரு. ஜவகர் மற்றும் போலீசார் தலைமையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது டிஷ்யூ பேப்பர் மூட்டையுடன் சேர்த்து மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.10.25 லட்சம் மதிப்பிலான  சுமார் 1500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். நிருபர்.முகமதுயூனுஸ்.

குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையின் மூன்றாவது கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் CCTV, கேமரா திருவெறும்பூர் காவல் சரக பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் இயக்கத்தை துவக்கி வைத்த SP. சுஜித் குமார் IPS

Image
   திருச்சி மாவட்ட திருவெறும்பூர் உட்கோட்ட காவல் சரக  ஜெய்நகர் பகுதியில் புதிதாய் 32 CCTV கேமராக்களை பொருத்தி அதன் இயக்கத்தினை திருச்சி மாவட்ட SP. சுஜித் குமார் IPS துவக்கி வைத்தார்.  காவல்துறை செயல்பாடுகளில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து திருட்டு போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும் குற்ற சம்பவங்களால் மக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பு பணியாற்றவும் CCTV கேமரா செயல்பாடுகள் மிகவும் உதவியாக உள்ளது ஆகையால் காவல்துறை மிகுந்த கவனத்துடன் மக்கள் வாழும் முக்கிய பகுதிகள் எங்கும் CCTV கேமராக்களை பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் குற்ற தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.  இது போன்ற ஒரு நிகழ்ச்சியான CCTV கேமரா பொருத்தி துவக்கிவைத்து மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வுஏற்படுத்தும் நிகழ்ச்சி கூத்தப்பர் பேரூராட்சிதலைவர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில்நடைபெற்றது கேமராக்கள் இயக்கத்தை SP.சுஜித்குமார் IPS.துவக்கிவைத்தார் திருவெறும்பூர் காவல்சரக DSP.அறிவழகன் மக்களுக்கு பாதுகாப்புவழிப்புணர்வு பற்றி பேசினார் காவல்ஆய்வாளர் சந்திரசேகரன்,மற்றும் காவலர்கள் ,பொத

நீலகிரி மாவட்ட காவல்துறைசார்பாக பழங்குடியினமக்களுக்கு தண்ணீர் வங்கிய DIG.Dr.முத்துசாமி IPS.

Image
  நீலகிரி மாவட்டத்தில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் DIG.Dr. முத்துசாமி IPS அவர்கள், தேவாலா உட்கோட்டம் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வட்டக்கொல்லி பழங்குடியின கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களை சந்தித்துஅவர்களின் குறைகளை கேட்டு அறிந்து,  அவர்களுக்கு தண்ணீர் தொட்டி வழங்கினார் உடன் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ் ராவத் IPS மற்றும் தேவால உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில் குமார் இருந்தனர். மேலும் தேவாலா பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு ஹெல்மெட் மற்றும் விழிப்புணர்வு பேரணிக்கு டீ-சர்ட்  வழங்கினார். நிருபர்.K.கண்ணன்.

சேலம்அரசுமருத்துவமனை வளாகத்தில்செல்போன்,பணத்துடன் கண்டெடுத்த பர்சை காவல்நிலையத்தில் ஒப்படைத்த டிரைவர்ராஜேஷ் DCP.பாராட்டு.

Image
  30.11.2022 காலைதிரு.R.ராஜேஷ் (39)   , S/o ராமசாமி, திருச்செங்கோடு(TK), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த JCB டிரைவர் ராஜேஷ்  தனது மகளின்  பிரசவத்திற்காக சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டிற்கு வந்தவர்,  மகப்பேறு வார்டுக்கு வெளியே யாரோ தவற விட்டுச் சென்ற மணிபர்ஸ் (அதில் ரூபாய் 25, 000 பணமும், ஒரு கைபேசியும்,PAN Card மற்றும் ATM கார்டு) கீழே கிடந்ததைக் கண்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டி B-3 சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தை அணுகி ஒப்படைத்தார். பொருட்களை தவறவிட்ட திரு.R.கண்ணன்(53), S/o ரங்கநாதன், பாப்பம்பட்டி, ஓமலூர் என்பவரை கண்டுபிடித்து காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நேர்மையாக செயல்பட்ட  JCP. டிரைவர் ராஜேஷ் அவர்களை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.

கோவை மாவட்டம்ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர் SP.பாராட்டு.

Image
கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள்  ஆன்லைனில் OTP மூலமாக  பணத்தை இழந்த நபர்கள் மாவட்ட  சைபர் கிரைம்  காவல்  நிலையத்தில்  கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.2,08,374/- பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு  திரும்ப பெற்றுக் கொடுத்தனர். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  25.11.2022 பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும்,சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பத

திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா ACP. ஜோசப்நிக்ஸன் விழிப்புணர்வு உரை.

Image
நவம்பர் 27, திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா . நடைபெற்றது.   திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் 137- வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் செயலர் முனைவர் கோ. மீனா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள் சிலம்பம், யோகா, கலைப்பயிற்சி, பிரமிட் போன்றவற்றை சிறப்பாக செய்து காட்டினர்.  இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் அவர்கள் பேசும்போது, ஒழுக்கம், கல்வி, விளையாட்டு ஆகிய மூன்றும் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அவசியம் என்றார். பின்னர் அவர், போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் விளையாட்டு விழாவிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சம்பத்குமார் நன்றி கூறினார். சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.

காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி.

Image
  காஞ்சிபுரமாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றை நடத்த அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் அறிவுறுத்தினார். அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.P.P.ஜீலியஸ் சீஸர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.S.சுனில் ஆகியோர்களின் எல்லைக்குட்பட்ட 12 காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை காவல் நிலையம் அழைத்து குழந்தைகளுக்

திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் ட்ரைலர்லாரியை திருடிய திருடன் கைது தனிபடை காவல்குழுவினர் அதிரடி

Image
 .திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்தவர் அருமைநாயகம் இவரது மகன் கிருபை நாயகம் (25). இவரது ஜிப்புடன் கூடிய ட்ரெய்லர் லாரியை தனிஸ்லாஸ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்தமாதம் 19ஆம் தேதி துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனி அருகே லாரியை நிறுத்திவிட்டு 21ஆம் தேதி  ட்ரெய்லர் லாரியை எடுக்க சென்று பார்த்த பொழுது லாரியை காணவில்லை. இது சம்பந்தமாக கிருபை நாயகம் துவாக்குடி காவல் நிலையத்தில்  புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சிமாவட்ட SP. சுஜித்குமார்IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவரம்பூர்சரக DSP திரு.அறிவழகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கிருபை நாயகத்தின் உறவினரான நவல்பட்டு அண்ணா நகர்பகுதி இரண்டை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜோஸ்வா (32), 19ஆம் தேதி துவாக்குடி பகுதியில் நடமாடியது தெரியவந்தது. மேலும் ஜோஸ்வாவின் செல்போன் எண்ணின் டவர் லொகேஷன் பார்த்தபோது துவாக்குடி பகுதியில் காட