கொடைக்கானல் அக்கரைக்காடு ,கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு,விற்ப‌னை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது,காவல்துறைணயினர் அதிரடி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து உள்ளதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வ‌ந்த‌து, இந்நிலையில்  கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர்ன் ஊராட்சிக்கு உட்பட அக்கரைக்காடு கிராமத்தில் வசிப்பவர் மகேந்திரன்(37) இவர் தனது மனைவி மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார், இத‌னை தொட‌ர்ந்து இவர் கஞ்சா பயிரிட்டு  






அத‌னை விற்பனை செய்வ‌த‌ற்காக‌ கஞ்சா செடிகளை வீட்டின் அருகே காய வைத்ததாக கூறப்படுகிறது, இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கொடைக்கானல்  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த‌ன‌ர், தகவல் அடிப்படையில் அக்கரைக்காடு கிராமத்திற்கு சென்ற காவல் துறையினர் மகேந்திரன் வீட்டில் சோதனை செய்த போது கஞ்சா பாக்கெட்டுக்கள் மற்றும் காயவைத்திருந்த கஞ்சா இருந்தது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி பெனாசிர்(32),மகேந்திரன் தந்தை ராஜா(70) உள்ளிட்ட மூவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் மகேந்திரன் கஞ்சா புகைப்பதை  வழக்கமாக வைத்துள்ளார்,


மேலும் கஞ்சாவிற்காக பல கிலோமீட்டர் நடந்து சென்று அலைந்து வாங்கி கொண்டு வரும் காரணத்தினால் இவரது வீட்டிற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அருகே அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா பயிரிட்டு,அதனை முறையாக‌ குடும்ப‌த்தின‌ருட‌ன் இணைந்து பராமரித்து கஞ்சாவினை தனது தேவைக்கு எடுத்து கொண்டு மீதமுள்ள கஞ்சா செடிகளை பக்குவப்படுத்தி, காய‌வைத்து அத‌னை சிறிய‌ பாக்கெட்களில் அடைத்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் க‌ஞ்சா புகைப்ப‌வ‌ர்க‌ளை குறி வைத்து நீண்ட‌ நாட்க‌ளாக‌ விற்பனை செய்து வ‌ந்த‌தும் விசாரணையில் தெரிவியவந்துள்ளது மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் ப‌யிரிட்டிருந்த‌ கஞ்சா செடிகளை ப‌றித்து வ‌ந்து அத‌னை  உலர்த்துவதற்கு வீட்டின் அருகே காயவைத்த காரணத்தினால் காவல் துறையில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது ,

இதனையடுத்து ஆய்வாளர்.திரு.பாஸ்டின்தினகரன் தலைமையிலான காவல் துறையினர். மகேந்திரன்,பெனாசிர்,ராஜா உள்ளிட்ட மூவர்களின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்,  மேலும் இவர்களிடம் இருந்து எழுப‌தாயிர‌ம் ம‌திப்புள்ள‌ 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது, அர‌சு வருவாய் நில‌த்தில் சுமார் 5 சென்ட்  நிலப்பரப்பில் கஞ்சா பயிரிட்டதையும் காவல் துறையினர் அழித்துள்ளதும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.