விருதுநகர் சாத்தூர் இருசக்கரவாகனத்தில் சென்ற பள்ளிஆசிரியையிடம் செயினைபறித்துசென்ற வழிபறி கொள்ளையர்கள்விரட்டிபிடித்து கைது காவல்துறையினர் அதிரடி.


 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உட்கோட்டம் சாத்தூர் நகர் காவல் நிலையம் படந்தால் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த  இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயினை பறித்து தப்பி சென்றனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டதில் சாத்தூர் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் 2643 திரு. சதீஷ்குமார் அவர்கள் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினார். இந்த நிகழ்வை அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., அவர்கள், முதல் நிலை காவலர் திரு.சதீஷ்குமாரின் பணியினை பாராட்டி பண வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

நிருபர்.M.ஆனந்தகுமார்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.