கோவை மாவட்டம்ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர் SP.பாராட்டு.


கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள்  ஆன்லைனில் OTP மூலமாக  பணத்தை இழந்த நபர்கள் மாவட்ட  சைபர் கிரைம்  காவல்  நிலையத்தில்  கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.2,08,374/- பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு  திரும்ப பெற்றுக் கொடுத்தனர். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  25.11.2022 பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும்,சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.