திருச்சி மாநகரில் காவல்துறை ஆபரேஷன் மறுவாழ்வு திட்டத்தின்படி சாலைஓரம் ஆதரவற்றநிலையில் உள்ள முதியோர்கள்,குழந்தைகள் பிச்சைகாரர்களை மீட்டு காப்பகத்தில்ஓப்படைத்த ஆய்வாளர் அஜிம்


 2022 டிசம்பர் முதல் வாரத்தில் தமிழககாவல்துறை DGP.Dr.C. சைலேந்திரபாபுIPS அவர்கள்உத்தரவின்படி ஆபரேஷன் புதுவாழ்வு என்னும் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர காவல்ஆணையர்.திரு. கார்த்திகேயன்IPS அவர்கள் மேற்பார்வையில் திருச்சி மாநகரில் தனிப்படை அமைத்து 


குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.அஜிம் அவர்களின் தலைமையில்காவல்குழுவினர் திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் ரயில் நிலையம், ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் இன்னும் பல பொது இடங்களில் ஆதரவற்று பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 80க்கும் அதிகமான ஆதரவற்ற நபர்களை மீட்டு கங்காரு காப்பகத்திலும், குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்த்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது இத்தகைய சிறப்பான செயலை காவல்துறை உயரதிகாரிகளும் தமிழக அரசும் பாராட்டி கவுரவித்தனர் .

தலைமை நிருபர். ராக்கேஷ் சுப்பிரமணியன்



Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.