காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி.

 

காஞ்சிபுரமாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி நடத்தப்பட்டது.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றை நடத்த அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.P.P.ஜீலியஸ் சீஸர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.S.சுனில் ஆகியோர்களின் எல்லைக்குட்பட்ட 12 காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை காவல் நிலையம் அழைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புபாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி வினாடிவினா போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியும். மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புபாதுகாப்பு தொடர்பாக அவர்களுடன் உரையாடி மேலும் பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பாராட்டினார்.

சிறப்பு நிருபர் ம.சசி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.