கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து,13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகளை மீட்ட சூலூர் காவல்துறையினர் SP.பாராட்டு.



கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள்  உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்த ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.



இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள CCTV கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் (09.12.2022) சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட  முபாரக் அலி(29), ஜெகநாதன்(27) மற்றும் சரவணன்(24) என்பதும் தெரியவந்தது.

எனவே  அந்தபர்களை கைது செய்து, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13,00,000/-லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ‌1,60,000/-ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். 


இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று களவாடப்பட்ட நகைகளையும், பணத்தையும் பார்வையிட்டார். களவாடப்பட்ட சொத்துக்களை மீட்டுகொடுக்க உந்துகோலாக இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாராட்டும் விதமாக பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.  

வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்து  களவு போன சொத்துக்களை மீட்ட  தனிப்படை காவல்துறையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPE அவர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.