திண்டுக்கல் மாவட்டத்தில் இணைய வழியில் 3 நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,24,000/- பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தசைபர்க்ரைம் காவல்துறையினர்.DIG.பாராட்டு.


திண்டுக்கல்மாவட்டம் பழனியைச் சேர்ந்த துரையரசு (20) என்பவருக்கு ஆன்லைன் மூலம் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.85,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த விக்னேஷ்வர் (19) என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.14,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.25,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் மனுதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் 

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுபடி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மூன்று நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,24,000/- பணத்தை மீட்டு   திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG. திரு.ரூபேஷ் குமார் மீனா. IPS அவர்கள் மனுதாரர்களிடம் ரூ.1,24,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.

நிருபர்.P.சதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.