சேலம்அரசுமருத்துவமனை வளாகத்தில்செல்போன்,பணத்துடன் கண்டெடுத்த பர்சை காவல்நிலையத்தில் ஒப்படைத்த டிரைவர்ராஜேஷ் DCP.பாராட்டு.

 

30.11.2022 காலைதிரு.R.ராஜேஷ் (39)   , S/o ராமசாமி, திருச்செங்கோடு(TK), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த JCB டிரைவர் ராஜேஷ்  தனது மகளின்  பிரசவத்திற்காக சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டிற்கு வந்தவர்,


 மகப்பேறு வார்டுக்கு வெளியே யாரோ தவற விட்டுச் சென்ற மணிபர்ஸ் (அதில் ரூபாய் 25, 000 பணமும், ஒரு கைபேசியும்,PAN Card மற்றும் ATM கார்டு) கீழே கிடந்ததைக் கண்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டி B-3 சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தை அணுகி ஒப்படைத்தார். பொருட்களை தவறவிட்ட திரு.R.கண்ணன்(53), S/o ரங்கநாதன், பாப்பம்பட்டி, ஓமலூர் என்பவரை கண்டுபிடித்து காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நேர்மையாக செயல்பட்ட  JCP. டிரைவர் ராஜேஷ் அவர்களை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.