குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையின் மூன்றாவது கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் CCTV, கேமரா திருவெறும்பூர் காவல் சரக பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் இயக்கத்தை துவக்கி வைத்த SP. சுஜித் குமார் IPS

 

 திருச்சி மாவட்ட திருவெறும்பூர் உட்கோட்ட காவல் சரக  ஜெய்நகர் பகுதியில் புதிதாய் 32 CCTV கேமராக்களை பொருத்தி அதன் இயக்கத்தினை திருச்சி மாவட்ட SP. சுஜித் குமார் IPS துவக்கி வைத்தார்.

 காவல்துறை செயல்பாடுகளில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து திருட்டு போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும் குற்ற சம்பவங்களால் மக்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பு பணியாற்றவும் CCTV கேமரா செயல்பாடுகள் மிகவும் உதவியாக உள்ளது ஆகையால் காவல்துறை மிகுந்த கவனத்துடன் மக்கள் வாழும் முக்கிய பகுதிகள் எங்கும் CCTV கேமராக்களை பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் குற்ற தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

 இது போன்ற ஒரு நிகழ்ச்சியான CCTV கேமரா பொருத்தி துவக்கிவைத்து மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வுஏற்படுத்தும் நிகழ்ச்சி கூத்தப்பர் பேரூராட்சிதலைவர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில்நடைபெற்றது கேமராக்கள் இயக்கத்தை SP.சுஜித்குமார் IPS.துவக்கிவைத்தார் திருவெறும்பூர் காவல்சரக DSP.அறிவழகன் மக்களுக்கு பாதுகாப்புவழிப்புணர்வு பற்றி பேசினார் காவல்ஆய்வாளர் சந்திரசேகரன்,மற்றும் காவலர்கள் ,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.